முதல்வரை நோக்கி ஒருவயது குழந்தையை வீசிய தந்தை! மாநாட்டு மேடையில் ஏற்பட்ட பதற்றம்

 
ம்m

மேடையில் பேசிக் கொண்டிருந்த முதல்வரை நோக்கி தனது ஒரு வயது குழந்தையை வீசியிருக்கிறார் தந்தை . சுமார் 20 அடி தூரத்தில் இருந்து ஆவேசமாக குழந்தையை வீசியிருக்கிறார் அந்த தந்தை.  இதை பார்த்ததும் பதறி அடித்துக் கொண்டு குழந்தையை நோக்கி ஓடி வந்திருக்கிறார் முதல்வர்.  மேடைக்கு கீழே பாதுகாப்பு பணியில் நின்றிருந்த போலீசார் குழந்தையை லாவகமாக பிடித்திருக்கிறார்கள்.  அந்த குழந்தையின் தந்தையிடமும் தாயாரிடமும் விசாரணை நடத்திய போது  அவர் ஏன் குழந்தையை முதல்வரை நோக்கி வீசினார் என்பதற்கான காரணம் தெரிய வந்திருக்கிறது . ஆனாலும் தான் செய்வது தவறு தான் என்பதை அந்த தந்தை ஒப்புக் கொண்டு வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

சி

மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் சாகர் மாவட்டத்தில் மாநாடு நடந்திருக்கிறது. மாநாட்டில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மேடையில் பேசிக்கொண்டிருந்த போது,  முதல்வரை நோக்கி ஒரு வாலிபர் தனது ஒரு வயது குழந்தையை தூக்கி வீசி இருக்கிறார்.  இதை பார்த்ததும் பதறிய முதல்வர் பேசுவதை நிறுத்திவிட்டு குழந்தை வீசப்பட்ட திசையை நோக்கி ஓடி வந்திருக்கிறார். 

 இதை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் நிலைமையை உணர்ந்து குழந்தையைப் பிடிக்க முயன்றிருக்கிறார்கள்.  அப்போது மேடைக்கு கீழே நின்றிருந்த போலீசார் அந்த குழந்தையை லாவகமாக பிடித்து விட்டார்கள்.  பின்னர் அந்த வாலிபரை நோக்கி போலீசார் சென்றபோது வாலிபருக்கு அருகில் நின்றிருந்த அவரின் மனைவி ஓடி வந்து அந்த குழந்தையை வாங்கி இருக்கிறார்.  பின்னர் முதல்வர்,  ஏன்  அந்த வாலிபர் அப்படி செய்தார் என்று விசாரிக்கச் சொன்னபோது , போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்து இருக்கிறார்கள் .

அந்த குழந்தை நரேஷ் என்பதும் பிறந்தது முதல் இதயத்தில் கோளாறு இருந்ததாகவும் சொல்லி இருக்கிறார்.    பல மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றும் அந்த குழந்தைக்கு உடல் நலம் சரியாகவில்லை.   கூலித் தொழிலாளியான அந்த தந்தையால் பெரிய மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சை பார்க்கவும் முடியவில்லை.   

ச்

அப்படி இருந்தும் சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூரில் சிறப்பு சிகிச்சை பெற வசதி இல்லை என்பதால் மருத்துவர்கள் குழந்தையை மும்பைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தி இருக்கிறார்கள் . மும்பையில் அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்க முதற்கட்டமாக 3. 50 லட்சம் ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள் . அவ்வளவு பணம் தன்னிடம் இல்லாததால் கையை பிசைந்து நின்று இருக்கிறார் முகேஷ் பட்டேல் .

இந்த நிலையில் சாகரில் முதல்வர் பங்கேற்கும் மாநாடு நடப்பது நடப்பது தெரிய வந்திருக்கிறது . உடனே முகேஷ் தன் மனைவியை அழைத்துக்கொண்டு அங்கு சென்று இருக்கிறார்.  அங்கு தன் மகனுக்கு ஏற்பட்டுள்ள நிலைமையை விளக்கி சொல்லி சிகிச்சை பெற உதவ வேண்டும் என்று கேட்க சென்றிருக்கிறார்.  ஆனால் போலீசார் முதல்வரை சந்திக்க அனுமதிக்கவில்லை.  20 அடி தூரத்திற்கு அப்பால் அந்த முகேஷ் பட்டேல் தனது மனைவி மகனுடன் நின்றிருக்கிறார்.

 முதல்வரிடம் சென்று நிலைமையை விளக்கி சொல்லி உதவி கேட்க வேண்டும் என்று இரண்டு மணி நேரமாக போலீசாரிடம் போராடி இருக்கிறார்.  ஆனால் மேடைக்கு  அருகே அவரை அனுப்பு போலீசார் மறுத்து வந்திருக்கிறார்கள்.   ஒரு கட்டத்தில் ஆவேசம் அடைந்த முகேஷ் இதற்கு மேலும் வேறு வழி இல்லை என்று நினைத்து முதல்வரை நோக்கி தனது ஒரு வயது குழந்தையை வீசியிருக்கிறார். 

 இந்த விவரங்களை எல்லாம் தெரிந்து கொண்ட பின்னர் முதல்வர் அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்க அனைத்து உதவிகளையும் செய்வதாக கூறியிருக்கிறார் .  பின்னர் போலீசார் இடம் முகேஷ் பட்டேல் ,  ஆத்திரத்தில்  செய்து விட்டாலும் செய்த செயல் தவறானது என்று  வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

20 அடி தூரத்தில் இருந்து  மேடையில் முதல்வரை நோக்கி குழந்தை வீசப்பட்டதை பார்த்த கட்சியினரும் பொதுமக்களும் பதைபதைப்பில்  இருந்திருக்கிறார்கள்.