பழிக்கு பழி! டீக்கடையில் வாலிபர் வெட்டிக்கொலை

 
a

பழிக்கு பழியாக வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.   ஓசூரில் டீக்கடையில் நடந்திருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மாநகராட்சியில் உள்ள பெரியார் நகர் டீக்கடையில் இருந்திருக்கிறார் அந்த வாலிபர்.   அப்போது பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக அந்த வாலிபரை வெட்டி படுகொலை செய்து விட்டு தலைமறைவாகி இருக்கிறார்கள்.

த்

 பட்டப் பகலில் டீக்கடையில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  

 சம்பவ இடத்திற்கு வந்த ஓசூர் டிஎஸ்பி பாபு பிரசாத் தலைமையிலான நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்ததில் உயிரிழந்த வாலிபர் சொப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திலக் என்கிற 25 வயது வாலிபர் என்பது தெரிய வந்திருக்கிறது . 

போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வந்ததில்,  ஓசூரில் கடந்த ஆண்டு நடந்த கொலைக்கு பழிக்கு பழியாக இந்த வாலிபர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

தப்பி ஓடிய தொழிலாளர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.