மகனை கோடரியால் வெட்டிக்கொன்ற தந்தை

 
ax

தாயிடம் தகராறு செய்து கொண்டிருந்த மகனை கோடரியால் வெட்டி படுகொலை செய்துள்ளார் பெற்ற தந்தை.   

கர்நாடக மாநிலத்தில் பெலகாவி மாவட்டம் புத்துரகா கிராமம்.   இக்கிராமத்தைச் சேர்ந்தவர் சென்னப்பா.  இவருக்கு இரண்டு மகன்கள். இதில்  இரண்டாவது மகன் சேத்தன்.   இவர் கூலித் தொழிலாளி.   தந்தையும் கூலித் தொழிலாளியாக இருந்திருக்கிறார் .

சேர்த்தனுக்கு மதுப்பழக்கம் இருந்திருக்கிறது.   தினமும் மது குடித்துவிட்டு குடிபோதையில் வீட்டுக்கு வந்து தாயுடன் சண்டை போடுவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்.   மதுப்பழக்கத்தால் சரியாக வேலைக்கு செல்லாமல் தாயை அடித்து மிரட்டி பணம் வாங்கிச் சென்று மது குடித்து வந்திருக்கிறார்.

mu

சம்பவத்தன்று தாயிடம் பணம் கேட்டு சண்டை போட்டு இருக்கிறார்.   இதனால் தாய்க்கு, மகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.  அப்போது இதை பார்த்துக் கொண்டிருந்த சென்னப்பா ஆத்திரமடைந்து கோடரியை எடுத்து வந்து மகனின் தலையில் அடித்திருக்கிறார் .  இதில் படுகாயம் அடைந்த சேத்தன் கீழே விழுந்து இரத்த வெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.

 தகவல் அறிந்ததும் காகவாட் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சேத்தனன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.  சென்னப்பனை கைது செய்து அழைத்துச் சென்று இருக்கிறார்கள்.

பெற்ற மகனையே தந்தையே கோடரியால்  வெட்டிக்கொன்ற சம்பவம் புத்துரகா கிராம மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.