அந்த பெண்களின் கணவர்கள் எச்சரித்தும் காதில்வாங்காத இளைஞருக்கு நேர்ந்த கதி

 
x

நிதி நிறுவனத்திலும் வங்கிகளிளும் கடன் வாங்கித் தருவதாக சொல்லி திருமணமான பல பெண்களை வளைத்து போட்ட திருமணமாகாத அந்த இளைஞருக்கு இந்த கதி ஏற்பட்டு இருக்கிறது.  இதில் அவரது மரணத்திற்கு காரணம் யார் என்பதை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 நாமக்கல் மாவட்டத்தில் போடிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர்  சசிகுமார்.   இவர் நாமக்கல்லில் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் தவணை வசூலிக்கும் முகவராக வேலை செய்து வந்திருக்கிறார் .  கடந்த 26 ஆம் தேதி அன்று வேலைக்குச் சென்ற சசிகுமார் இரவு 10 மணி ஆகியும் வீடு திரும்பவில்லை.   குடும்பத்தினர் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது,  இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவேன் என்று சொல்லி இருக்கிறார்.   ஆனால் நள்ளிரவை தாண்டியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. 

b

மறுநாள் காலையில் ஊருக்கு அருகே காட்டுப்பகுதியில் சசிகுமார் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடக்கும் தகவல் கிடைத்திருக்கிறது.   போலீசார் சடலத்தை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த பின்னர் கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்திய போது தான் நிதி நிறுவனத்திலும் வங்கியிலும் கடன் வாங்கித் தருவதாக சொல்லி பல பெண்களை தன் வலையில் விழ வைத்திருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது.

 இது தெரிந்த அந்தப் பெண்களின் கணவர்கள் சசிகுமாரை எச்சரித்து வந்ததும் வெளியே வந்திருக்கிறது.   சில மாதங்களாக ஒரு பெண்ணுடன் ரொம்ப நெருங்கி பழகி வந்ததை அறிந்த அவரது கணவர் கையும் களவுமாக பிடித்து கடுமையாக எச்சரித்திருக்கிறார் .  ஆனால் அதன் பின்னரும் அந்த பெண்ணுடன்  தொடர்பை விடாமல் தொடர்ந்து இருக்கிறார்.   இதனால் ஆத்திரமடைந்து அவர் சசிகுமாரை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.