அண்ணன் -தங்கை உறவு முறை : காதலிப்பதை நிறுத்திய மாணவிக்கு நேர்ந்த கதி

காதலியை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அண்ணன்- தங்கை உறவு என்று தெரிய வந்ததால் அந்த மாணவி காதலிப்பதை நிறுத்திருக்கிறார். இதை புரிந்து கொள்ளாத அந்த இளைஞர் காதலிக்க மறுத்த விட்டார் என்பதற்காக கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் குளவாய்பட்டி அடுத்த மயிலாடி காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பவித்ரா புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார் பவித்ரா.
கல்லூரி மாணவியான பவித்ராவை தான் வசித்து வரும் அதே பகுதியைச் சேர்ந்த துரை என்ற இளைஞர் காதலித்து வந்திருக்கிறார். கூலி வேலை செய்து வரும் துரையை பவித்ராவும் காதலித்து வந்திருக்கிறார். பின்னர்தான் துரையும் பவித்ராவும் அண்ணன் தங்கை உறவுமுறை என்பது தெரிய வந்திருக்கிறது. இதனால் அதற்கு மேல் காதலை தொடர மறுத்திருக்கிறார் பவித்ரா. ஆனால் துரை தொடர்ந்து பவித்ராவை காதலித்து வந்திருக்கிறார் .
அண்ணன் -தங்கை உறவு என்று பவித்ரா எடுத்துச் சொல்லியும் அதைப்பற்றி எல்லாம் காதில் வாங்கவே இல்லை துரை. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அம்மை நோயால் பாதிக்கப்பட்ட பவித்ரா வீட்டில் ஓய்வு எடுத்து இருக்கிறார். பெற்றோர் வழக்கம்போல் கூலி வேலைக்காக வெளியே சென்றிருந்த நிலையில் பவித்ரா மட்டும் வீட்டில் தனியாக இருப்பது அறிந்து கொண்ட துரை வீட்டிற்குள் சென்றிருக்கிறார்.
தன்னை ஏன் இதற்கான காதலிக்கவில்லை. முன்பு போலவே தன்னை காதலிக்க வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறார் . அதற்கு பவித்ரா மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த துரை திட்டமிட்டு முன்கூட்டியே மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கொலை செய்திருக்கிறார். பவித்ராவை கொலை செய்த பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். கொலை மற்றும் தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.