கள்ள உறவால் கணவனை இழந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

 
de

 கள்ள உறவால் கணவனை இழந்த பெண் தலையில் கல்லை போட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் .  திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்திருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம்.

 திண்டுக்கல் மாவட்டத்தில் மாலைப்பட்டி காமாட்சி நகர்.  அப்பகுதியைச் சேர்ந்தவர் செல்லமணி .  45 வயதான அந்தப் பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.   கணவர் தற்போது உயிருடன் இல்லை.  அதனால்  கட்டிட வேலைகளுக்கு கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தை காப்பாற்றி வந்திருக்கிறார் அந்த பெண்.

b

 கணவர் இல்லாததை அறிந்த கட்டிட வேலை செய்யும் தொழிலாளிகள் செல்லமணியுடன் பழகி வந்திருக்கிறார்கள்.  அவர்கள் கள்ள உறவில் பழகி வந்திருக்கிறார்கள்.

 இந்த நிலையில் நேற்று மாலையில் கல்லூரி சென்று விட்டு இரண்டாவது மகன் சுந்தர் வீட்டுக்கு வந்திருக்கிறார்.   அப்போது தாயார் செல்லமணி தலையில் குழவி கல்லை போட்டு படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கடந்து இருக்கிறார் .  

இதை கண்டு கதறி துடித்த அவர் அக்கம்பக்கத்தினரை அழைத்து இருக்கிறார்.   அக்கம் பக்கத்தினர் வந்து அதிர்ச்சி அடைந்தவர்கள்,  திண்டுக்கல் தாலுக்கா போலீசுக்கு தகவல் கொடுத்து இருக்கிறார்கள் .  சம்பவ இடத்திற்கு வந்து வந்த போலீசார் , செல்லமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர் . அதன் பின்னர் கொலை குறித்து தீவிர விசாரணை  நடத்தி வருகின்றார்கள் போலீசார்.