“அவனோட உனக்கு என்ன பேச்சு?”... பெண்ணின் கழுத்தை அறுத்த கள்ள காதலன்!

 
murder

திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பெண்ணின் கழுத்தை அறுத்த கள்ள காதலனை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் கைது செய்தனர்.

murder

திருப்பூர் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான பல்லடம் சாலை வித்தியாலயம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராணி. இவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் ஜெயராணி (48) அதே பகுதியில் வசித்து வரும் செல்வகுமார் (52) என்பவரை காதலித்து உள்ளார். மேலும் ஜெயராணிக்கு மற்ற ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் திருப்பூர் பல்லடம் சாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஜெயராணி இருப்பதை அறிந்து அங்கு வந்த செல்வக்குமார் ஜெயராணியை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் செல்வகுமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெயராணி கழுத்தை அறுத்துள்ளார். 

தொடர்ந்து இந்த சம்பவத்தை பார்த்து அப்பகுதி மக்கள், செல்வக்குமாரை தர்ம அடி கொடுத்து பிடித்து வைத்தனர் பின்னர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருப்பூர் வீரபாண்டி காவல் துறையினர் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி செய்த செல்வகுமார் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கழுத்து அறுக்கப்பட்டு இருந்த ஜெயராணியை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.