சகோதரி தீப்பற்றி எரிந்த போது காப்பாற்றாமல் வீடியோ எடுத்த சகோதரர்

 
f

சகோதரி தீப்பற்றி எரிந்த போது அவரைக் காப்பாற்ற முயற்சிக்காமல் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இருக்கிறார் சகோதரர்.  தீக்குளித்த அந்தப் பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.   இந்த அதிர்ச்சி சம்பவம் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் நடந்திருக்கிறது.

 அம்மாநிலத்தில் நகரின் ரெட்டி காலணியில் வசித்து வரும் சுந்தர்லால்  என்பவருக்கு ஐந்து குழந்தைகள்.  இதில் இரண்டு மகள்களுக்கு திருமணமாகி விட்டதால் ஊர்மிளா, சரோஜ் , சஞ்சீவ் உள்ளிட்ட மூன்று பேருடன் சுந்தர்லால் வசித்து வந்திருக்கிறார். தான் வசித்து வரும் அதே பகுதியில்,  பகுதி நேர வேலை செய்து வருகிறார் சுந்தர்லால்.

சுந்தர்லால் மகள் சரோஜ்க்கு 31 வயதாகிறது.   பக்கத்து வீட்டார் உடன் ஏற்பட்ட தகராறு காரணமாக போலீசார் சரோஜை விசாரணைக்கு அழைக்க,  அவர் பெற்றோரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.   அப்போது அவரின் சகோதரர் சஞ்சீவ் உடன் சென்று இருக்கிறார் . 

fi

காவல் நிலையத்திற்குச் சென்றதும் தங்கள் பக்கம் நியாயம் இருப்பதை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக தன் சகோதரியை தீக்குளிக்கச் சொல்லி தூண்டி இருக்கிறார் சகோதரர் சஞ்சீவ்.   உடனே சரோஜ் தன் மீது பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டிருக்கிறார்.  தீ வேகவேகமாக பரவி எரிந்திருக்கிறது.  இதை பார்த்ததும் ஆபத்தை உணர்ந்து உடனே  தீப்பற்றி எரித்த சகோதரியை  காப்பாற்ற முயற்சிக்காமல் சகோதரி தீப்பிடித்து  அலறி துடித்ததை வீடியோ எடுத்திருக்கிறார்.

 இதன் பின்னர் போலீசார் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.  மருத்துவமனையில் அந்த பெண் தீக்காயம் அதிகமாக இருப்பதால்  கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் .

இதற்கிடையில் தன் சகோதரி தீப்பற்றி எரிந்ததை வீடியோ எடுத்த சஞ்சீவ் அதை வலைத்தளங்களில் பகிர்ந்து இருக்கிறார்.   போலீசாரிடம் சரோஜ் அளித்த வாக்குமூலத்தில்,  பக்கத்து வீட்டுக்காரர் பவன் மனைவி அண்மையில் தான் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  உள்ளாட்சி தேர்தலில் தன் மனைவி வெற்றி பெற்ற பின்னர் தன்னை மிரட்டி வருகிறார் பவன் என்று கூறி இருக்கிறார்.  இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  அதே நேரம் தன் சகோதரியை தீக்குளிக்க முயற்சிக்க சொல்லி தூண்டி விட்டதோடு அல்லாமல் அதை வீடியோ எடுத்து வெளியிட்ட சஞ்சீவ் மீதும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.