மது போதையில் சிகரெட் தர மறுத்த பெட்டி கடைக்காரரை அறிவாளால் வெட்டிய சிறுவர்
கோவில்பட்டியில் மது போதையில் சிகரெட் தர மறுத்த பெட்டி கடைக்காரரை அறிவாளால் வெட்டிய ஒரு சிறார் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜூவ் நகரை சேர்ந்தவர் ஜோதி(55). இவர் பசுவந்தனை சாலையில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு இவரது கடைக்கு மது போதையில் வந்த சில இளைஞர்கள் ஓசியில் சிகரெட் கேட்டுள்ளனர். இதற்கு ஜோதி தர மறுக்கவே அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் தங்கள் கொண்டு வந்த அரிவாளை கொண்டு தலை மற்றும் தோள்பட்டை பகுதியில் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த ஜோதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மாடசாமி (19), விஜய பாண்டி(20), மணிகண்டன் (21) மேலும் 17 வயதுடைய ஒரு சிறார் உட்பட நான்கு பேர் கைது செய்தனர்.

