6 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜுக்குள் இருந்த பெண்ணின் உடல்! நாற்றம் வராமல் இருக்க ஊதுபத்தி, கற்பூரம், டெட்டால்

 
u

 பெண்ணை கத்தியால் குத்தி கொன்று பின்னர் உடலை ஆறு துண்டுகளாக வெட்டி உடல் அழுகி போகாமல் இருக்க பிரிட்ஜுக்குள் வைத்து இருந்திக்கிறார் அந்த வாலிபர்.  நாற்றம் வராமல் இருக்க ஊதுபத்தி, கற்பூரம், டெட்டால், வாசனை திரவியங்களை பயன்படுத்தி வந்திருக்கிறார் அந்த வாலிபர் . தனித்தனியாக மீகப்பட்ட உடல் பாகங்களை வைத்து போலீசார் விசாரணையில் குற்றவாளியை பிடித்துள்ளனர்.

 ஹைதராபாத்தில் வதித்து வந்தவர் சந்திரமோகன்.  இவருக்கு அனுராதா என்ற பெண்ணுடன் பழக்கம் இருந்திருக்கிறது.   அனுராதா ஒரு கந்துவட்டிக்காரர். அவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் தனது வீட்டில் கீழ் பகுதியில் தங்கும் வசதி செய்து கொடுத்திருக்கிறார்  சந்திரமோகனுக்கு. 

k

 அனுராதா கந்துவட்டிக்காரர் என்பதால் அவரிடம் 2018 ஆம் ஆண்டு முதல் 7 லட்சம் ரூபாய் வரைக்கும் கடன் வாங்கி இருக்கிறார் சந்திர மோகன்.  இந்த கடனை திருப்பித் தருமாறு அனுராதா கேட்டு நெருக்கடி கொடுத்து வந்திருக்கிறார்.  இதனால் அனுராதாவை கொன்று விட வேண்டும் என்று முடிவு எடுத்திருக்கிறார் சந்திர மோகன் . அதன்படி கடந்த மே 12ஆம் தேதி அன்று கொடுக்கல் வாங்கலில்  இருவருக்கும் இடையே வாக்குவாதம் வந்தபோது அனுராதாவை கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார் சந்திரமோகன்.

 சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார் அனுராதா.  கல்வெட்டும் இயந்திரங்களை வாங்கி உடலை ஆறு துண்டுகளாக வெட்டி இருக்கிறார்.  மே 15 ஆம் தேதி அன்று தலையை எடுத்து ஒரு பாலிதீன் பையில் போட்டு எடுத்துச் சென்று குப்பை கொட்டும் இடத்தில் போட்டு விட்டு சென்றிருக்கிறார்.  பிரிட்ஜுக்குள் இருந்த உ டல் பாகங்களில் நாற்றம் வராமல் இருக்க ஊதுபத்தி, கற்பூரம், டெட்டால் போன்ற வாசனை பொருட்களை பயன்படுத்தி வந்திருக்கிறார் சந்திர மோகன்.

 அனுராதாவின் செல்போனை எடுத்து வைத்துக்கொண்டு அவருக்கு தெரிந்தவர்களுக்கு எல்லாம் மெசேஜ் அனுப்பி அனுராதா உயிருடன் இருப்பதை போலவே செய்து வந்திருக்கிறார் சந்திர மோகன்   குப்பை அள்ளும் தொழிலாளி கடந்த 17ம் தேதி அன்று குப்பைக்குள் இருந்து ஒரு  காலை எடுத்து இருக்கிறார் . அதன் பின்னர் தலை கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.  

மீதம் இருக்கும் உடல் பாகங்களை  பிரிட்ஜுக்குள் வைத்து இருந்தத சந்திரமோகன் அப்புறப்படுத்துவதற்கு உள்ளாக அவரை போலீசார் பிடித்திருக்கிறார்கள்.