கள்ளக்காதலி முன்பு வாலிபர் சித்திரவதை -அவமானம் தாங்காமல் இளைஞர் அடித்துக் கொலை

 
b

கள்ளக்காதலின் முன்பு அவரின் கள்ளக்காதலனை சித்திரவதை செய்ததால் அவமானமும் அடியையும் தாங்க முடியாமல் அந்த வாலிபர் இளைஞரை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்திருக்கிறார்.   திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.  

 வேடசந்தூர் அடுத்த தேவ நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் உமாராணி.   42 வயதான இந்த  பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவர் இறந்து விட்டதால் கோவையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வேலை செய்து பிழைத்திருக்கிறார்.  அப்போது கோவையில் கணேசன் என்ற முப்பது வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ள உறவாக மாறி இருக்கிறது. 

 பெயிண்டரான கணேசன் உமாராணியுடன் வாடகைக்கு வீடு எடுத்து கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.  இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.  இதனால் கணேசன் இடம் சண்டை போட்டுக் கொண்டு தனது சொந்த ஊரான தேவநாயக்கன்பட்டிக்கு சென்றிருக்கிறார் உமா . அவரை சமாதானப்படுத்தி அழைத்து வருவதற்காக தேவநாயக்கன்பட்டிக்கு சென்று இருக்கிறார் கணேசன்.

ம்

 அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் காளிதாஸ் என்பவரிடம்,   கணேசனை வேடசந்தூரில் பேருந்து நிலையத்தில் இறக்கி விடுமாறு கூறியிருக்கிறார் உமா. அந்த இளைஞர்  கணேசனை பைக்கில் ஏற்றிக்கொண்டு சென்றிருக்கிறார்.  வழியில் மது அருந்தி விட்டு போகலாம் என்று சொல்லி கடைசி மது அருந்த வைத்திருக்கிறார்.  போதை ஏறியதும்,  எங்க ஊரு பொண்ணுகிட்ட எதுக்கு பிரச்சனையே வச்சிக்கிற.  அப்புறம் உன்னை கொன்று போட்டு விடுவோம் என்று மிரட்டி இருக்கிறார் காளிதாஸ்.

 அவரின் பேச்சில் அதிர்ச்சி அடைந்த கணேசன்,  உடனே உமாவுக்கு போன் செய்து,  என்னை அடித்துக் கொன்று விடுவார்கள் போலிருக்கிறது.  உடனே வந்து என்னை காப்பாற்று என்று சொல்ல, வாடகை கார் எடுத்துக்கொண்டு பூத்தாம்பட்டி பகுதியில் இருக்கும் மதுபான கடைக்கு அருகே வந்திருக்கிறார் உமா.  அப்போது உமா காளிதாஸ்- கணேசன் மூன்று பேருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது.  இதில் தனது செல்போனுக்கு ஒரு அழைப்பு வரவும் பேசிக்கொண்டே சென்று இருக்கிறார் கணேசன்.

 பின்னர் வந்து பார்த்தபோது காரில் உமாவும் காளிதாசும் பேசிக் கொண்டிருந்தார்கள்.  அப்போதும் கணேசனை காருக்குள் வரவைத்து மீண்டும் அவரிடம் கள்ளக்காதலியின் முன்பாகவே சித்திரவதை செய்து இருக்கிறார் காளிதாஸ்.  அடிதாங்க முடியாத கணேசன் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்று தான் வைத்திருந்த பீர்பாட்டில் எடுத்து உடைத்து காளிதாசன் கழித்து இருக்கிறார்.  சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார் பின்னர் தகவல் அறிந்த வேடசந்தூர் போலீசார் காளிதாசன் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர் . உமா மற்றும் கணேசனை வேடசந்தூர் போலீசார் கைது செய்துள்ளனர்.