வீடு புகுந்து ஆசிரியை பலாத்காரம் -செல்போன் சிக்னல் மூலம் சிக்கிய வாலிபர்

வீட்டில் தனியாக இருந்த ஆசிரியையை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு மிரட்டி சென்ற வாலிபர் செல்போன் சிக்னல் மூலம் சிக்கி இருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் செம்பூர் பகுதியில் வசித்து வந்தவர் கணேஷ் ஜெயக்குமார் வர்மா. 45 வயதான இந்த வாலிபர், தான் வசித்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஆசிரியையை பாலோ செய்து வந்திருக்கிறார்.
கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி அன்று திடீரென்று ஆசிரியை வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்திருக்கிறார். தனியாக இருந்த ஆசிரியையை பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருக்கிறார். ஆசிரியை சத்தம் போடவும் அங்கிருந்து வெளியேறியிருக்கிறார். இதன் பின்னர் மே 13ஆம் தேதி அன்று இரவில் ஆசிரியை தனியாக இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்ட அந்த வாலிபர், மீண்டும் இரவு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து இருக்கிறார். அவரைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ஆசிரியை வெளியே போக சொல்லி சத்தம் போட்டிருக்கிறார்.
ஆனால், அவரை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அதன் பின்னர் நடந்ததை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி விட்டு சென்று இருக்கிறார். இதற்கு மேலும் பொறுமையாக இருந்தால் தனக்கு ஆபத்து என்பதை உணர்ந்த ஆசிரியை போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கணேஷ் ஜெயக்குமாரை தேடி வந்த போது அவர் தலைமறைவாகி விட்டார். அவரின் செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது அந்த செல்போன் எண் காட்டிய சிக்னலை வைத்து போலீசார் கணேஷ் ஜெயக்குமார் வர்மாவை பிடிக்க சென்றிருக்கிறார்கள். ஆனால் கணேஷ் தனது இருப்பிடத்தை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருந்ததால் அவரை பிடிப்பதில் போலீசாருக்கு சிரமம் இருந்து வந்திருக்கிறது.
இருந்தாலும் சவாலாக எடுத்துக் கொண்டு போலீசார் தொடர்ந்து முயற்சிக்க, நேற்று முன்தினம் இரவு கணேஷ் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.