"மறைமுகமாக உறவுக்கு கூப்பிட்டு இரவெல்லாம் .."போன் மூலம் மாணவிக்கு ஒரு ஆசிரியரின் பாலியல் தொல்லை

 
iPhone 13 Pro

பள்ளி மாணவிக்கு மொபைல் போனில் ஆபாச பதிவுகளை அனுப்பி துன்புறுத்தியதாக, ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

rape
தமிழகத்தின் உடுமலை அருகே திருப்பூர் மாவட்டம், உடுமலை தீபாலபட்டியைச் சேர்ந்தவர் 37 வயதான  அசோக்குமார்,இவர்  கரட்டுமடம் அரசு உதவி பெறும் பள்ளியில், தமிழாசிரியராக பணி புரிகிறார் .இவர் தன்னிடம் படிக்கும் ஒரு அழகான மாணவி மீது ஆசை பட்டார் .அதனால் அவரை எப்படியாவது தன்னுடைய வலையில் விழ வைக்க திட்டமிட்டார் .அதனால் அவரின் போன் நம்பரை ரகசியமாக வாங்கி ,அவருக்கு அடிக்கடி ஆபாச மெஸேஜ் அனுப்பியுள்ளார் 
மேலும் வாட்ஸ் ஆப் வாயிலாக பாலியல் ரீதியான ஆபாச பதிவுகளை அனுப்பி, தொந்தரவு செய்தார் .இதனால் அவர் மீது இந்த பாலியல் தொல்லை பற்றி திருப்பூர் 'சைல்டு லைன்' எண்ணுக்கு புகார் வந்தது. அந்த புகாரின் பேரில் திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் நடத்திய விசாரணையில், அசோக்குமாரின் மொபைல் போனில் இருந்து மாணவிக்கு பல்வேறு ஆபாச பதிவுகளை அனுப்பியது உறுதி செய்யப்பட்டது. திருப்பூர் 'சைல்டு லைன்' மைய ஒருங்கிணைப்பாளர் கதிர்வேல் புகார் அடிப்படையில், உடுமலை மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிந்து, அசோக்குமாரை நேற்று கைது செய்தனர்.