"உயிரியல் வாத்தியார் உரசிகிட்டே இருக்கார்" -புகாரளித்த மாணவிகள் -அடுத்து ஹெட் மாஸ்டர் செஞ்ச கொடுமை .

 
arrest

மாணவிகளிடம் சீண்டலில் ஈடுபட்ட  ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல், மாணவ - மாணவியரை மிரட்டிய, ஹெட் மாஸ்டர்  தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டார் 

rape
தமிழகத்தின் ஈரோடு மாவட்டம், பெருந்துறை, சீனாபுரத்தில் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு உயிரியல் பாட ஆசிரியராக பணிபுரிந்தவர் 49 வயதான மூர்த்தி, .இவர் அவர் பாடமெடுக்கும் பள்ளி மாணவியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இது குறித்து, கடந்த செப்டம்பர் மாதமே பாதிக்கப்பட்ட மாணவியர் புகார் செய்தனர். ஆனால், அந்த பள்ளி தலைமையாசிரியர் நடவடிக்கை எடுக்காததால் , 'சைல்டுலைன்' அமைப்புக்கு மாணவியர் மூவர் புகார் தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில், ஈரோடு அனைத்து மகளிர் போலீசார், ஆசிரியர் திருமலைமூர்த்தி மீது 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிந்து, நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில் அந்த வாத்தியார் மீது ஏற்க்னவே மாணவிகள் புகாரளித்தும் அவர் மீது அந்த ஸ்கூல் ஹெட்மாஸ்டர் எந்த  நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளதை  கண்டித்து அந்த ஊர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .அதனால் அந்த ஹெட்மாஸ்டர் பொது மக்களிடம் மன்னிப்பு கேட்டார் .அதன் பிறகு அந்த ஹெட்மாஸ்டர்  சஸ்பண்ட் செய்யப்பட்டார்