"டீச்சருக்கே பாலியல் டார்ச்சர் கொடுக்கிறானே ?" -திட்டிய டீச்சருக்கு மாணவனால் நேர்ந்த கதி

திட்டிய டீச்சர் பற்றி சமூக ஊடகத்தில் ஆபாசமாக வெளியிட்ட மாணவரை போலீஸ் கைது செய்தது
டெல்லியில் துவாரகா பகுதியில் ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறது ,அந்த பள்ளியில் பல மாணவர்கள் படித்து வருகின்றனர் .இந்நிலையில் அந்த பள்ளியில் உள்ள 12ம் வகுப்பு மாணவனுக்கு ஒரு டீச்சர் பாடம் எடுத்து வந்தார் .ஆனால் அந்த மாணவர் சரியாக படிக்காததில் அந்த டீச்செர் கோவப்பட்டு வந்த மாணவரை திட்டியுள்ளார் .அதனால் அந்த மாணவர் அந்த டீச்சரை பழி வாங்க காத்திருந்தார் .
அதன் படி அந்த மாணவர் அந்த டீச்சரின் பெயரில் போலியாக ஒரு கணக்கை உருவாக்கி அதில் அவரின் போட்டோவையும் போன் நம்பரையும் ஊடகத்தில் வெளியிட்டு அவரை பற்றி ஆபாசமாக எழுதியுள்ளார் .அதை பார்த்த பலர் அந்த டீச்சருக்கு போன் செய்து ஆபாசமாக பேசியுள்ளனர் .இதனால் அந்த பெண் மிகவும் மன வேதனைப்பட்டு அந்த மாணவர் மீது அந்த பள்ளியிலும் போலீசிலும் புகார் கொடுத்தார் .சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிந்து அந்த 12ம் வகுப்பு மாணவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்