பாலியல் பலாத்காரத்தில் தப்பித்து வந்த மாணவி - விளையாட்டு பயிற்சியாளர் சிறையிலடைப்பு

 
f

சான்றிதழ் வீட்டில் இருக்கிறது என்று  வரவழைத்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதில் அவரிடம் தப்பித்து ஓடிவந்த கல்லூரி மாணவி அளித்த புகாரில் விளையாட்டு பயிற்சியாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் .

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் பகுதியில் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கம் அமைந்திருக்கிறது.   தடகளம், கால்பந்து ,ஹாக்கி , கூடைப்பந்து, நீச்சல் , வாலிபால் உள்ளிட்ட பயிற்சிகளுக்கான மைதானங்கள் இந்த விளையாட்டு அரங்கத்தில் உள்ளன.   இங்கு நாள்தோறும் பயிற்சியாளர்கள் வந்து விளையாட்டு வீராங்கனைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றார்கள்.  

வ்க்

இக்கு ஸ்குவாஸ் பயிற்சி மேற்கொண்டு வந்திருக்கிறார் வாலாஜா பகுதியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு கல்லூரி மாணவி.   பயிற்சி முடிந்த பின்னர் தனக்கு அளிக்க வேண்டிய சான்றிதழ் குறித்து பயிற்சியாளர் விஷ்ணு காஞ்சியிடம் கேட்டு இருக்கிறார்.  அதற்கு அந்த பயிற்சியாளர்,   விளையாட்டு அரங்கம் அருகே இருக்கும் தனது வீட்டில் சான்றிதழ் இருக்கிறது.   அங்கு வந்து வாங்கிக் கொள் என்று சொல்லி இருக்கிறார். 

 இதை நம்பிய அந்த மாணவி விளையாட்டு பயிற்சியாளரின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.   அங்கு சென்றதும் சான்றிதழை தராமல் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்திருக்கிறார்.   இதில் அதிர்ச்சி அடைந்த மாணவி பயிற்சியாளரிடம் இருந்து தப்பித்து வெளியே ஓடி வந்து  அங்கிருந்த பொதுமக்களிடம் சொல்லி கதறி இருக்கிறார்.

 உடனே அப்பகுதியினர் போலீசுக்கு தகவல்  அளித்துள்ளனர்.  இதை அடுத்து விரைந்து வந்த போலீசார் பயிற்சியாளர் விஷ்ணு காஞ்சியை கைது செய்து இரண்டு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருக்கிறார்கள்.   நீதிபதியின் உத்தரவு அடுத்து காஞ்சி  கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.