குளிர்பானத்தில் மயக்கம் மருந்து கலந்து கொடுத்து இன்டர்ன்ஷிப் வந்த மாணவி சீரழிப்பு

 
rape rape

சென்னையில் குளிர்பானத்தில் மயக்கம் மருந்து கலந்து கொடுத்து இன்டர்ன்ஷிப் வந்த மாணவி சீரழிக்கப்பட்ட சம்பவத்தில் பிசியோதெரபிஸ்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.

rape


சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த இளம் பெண்  வேலப்பன் சாவடியில் உள்ள தனியார் மெடிக்கல் காலேஜில் B. Sc (physiotherapy) 4ம் ஆண்டு படித்து வருகிறார். இன்டென்ஷிப்பிற்காக பெரம்பூரில் உள்ள D. R. Paediatric and geriatric rehabilitation மருத்துவமனையில் கடந்த 17ம் தேதி சேர்ந்தார். home visit சென்று மருத்துவம் பார்த்து வந்ததாகவும், மாதாந்திர உதவித் தொகையாக 4000 வழங்கப்படும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை 6.30 மணிக்கு தான் வேலை செய்யும் மருத்துவமனை உரிமையாளரான  பிசியோதெரபிஸ்ட் கார்த்திக்கேயன் தனக்கு போன் செய்து ஒரு நோயாளிக்கு venflan போட வேண்டுமென கூறியதால் சுமார் 1 மணியளவில் நான் அங்கு சென்றேன். பின் சாந்தி என்பவர் வீட்டிற்கு அழைத்து சென்று பின் அங்கிருந்து ரேவதி என்ற பெண்ணிற்கு மசாஜ் செய்ய வேண்டும் எனக் கூறி தன்னை கொளத்தூர் ஜெயந்தி நகரில் ஒரு அப்பார்ட்மெண்டிற்கு அழைத்து சென்றதாகவும் அப்போது தன்னிடம் டீ, காபி ஏதும் வேண்டுமா என கேட்டதாகவும்

தான் தனக்கு டீ, காபி குடிக்கும் பழக்கம் இல்லை என கூறியதால் கார்த்திக்கேயன் தனது காரில் வைத்திருந்த coco cola  கொடுத்துள்ளார். அதன் பின் தனக்கு மயக்கமாக இருந்ததாகவும் தான் அந்த அப்பார்ட்மெண்டில் உள்ள அறைக்குள் நுழைந்த பின்  தனக்கு எதுவும் ஞாபகம் இல்லை என்றும், தான் கண்விழித்து பார்த்த போது தன் மீது கார்த்திக் நிர்வாணமாக படுத்து இருந்ததாகவும் கொளத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார். பின் தான் கார்த்திக்கை  தள்ளி விட்டதாகவும், பின் அங்கிருந்து இருவரும் கிளம்பி சீதா என்ற நோயாளி வீட்டிற்கு செல்லும் வழியில், தான் பாதியில் இறங்கி மருத்துவனை சென்றதாகவும். பயத்தில் வீட்டில் சொல்லாமல் தனது அக்கா ஷர்மிளாவிடம் சொன்னதாகவும், பின் அக்கா மற்றும் உறவினர்கள் மருத்துவமனை சென்று அங்கு கார்த்திக்கின் மனைவியிடம் விசாரித்துள்ளனர். அவர் சரிவர பதில் எதுவும் சொல்லவில்லை. இதையடுத்து கொளத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார், BNS- 123- குற்றம் செய்யும் நோக்கத்துடன் விஷம் அல்லது தீங்கு விளைவிக்கும் பொருட்களை கொடுதல், BNS 63- கற்பழிப்பு, BNS 64-  ( கற்பழிப்புக்கான தண்டனை பிரிவு) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து இன்று காலை பிசியோதெரபிஸ்ட் கார்த்திகேயனை கைது செய்தனர். இவர் இதே போல் எத்தனை பெண்களை சீரழித்துள்ளார் எனவும்  தீவிர விசாரணை நடைபெறுகிறது.