"நான் ஒரு லெஸ்பியன் ,எனக்கு கம்பெனி கொடுக்க வரியா" -நம்பிய பெண்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

 
lesbian

நிர்வாண படங்களை வெளியிடுவதாக இளம் பெண்களை மிரட்டி பணம் பறித்த பெங்களூரு கல்லுாரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

Youth arrested for blackmailing girls [Representative image]
கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள ஒரு  கல்லுாரியில்  படிக்கும் 21 வயதான பிரபஞ்ச் நாச்சப்பா அங்குள்ள பிரேசர் டவுனில் வசிக்கிறார். இவர் பானஸ்வாடியில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை  இறுதியாண்டு படித்து வருகிறார். அவர் கடந்த செப்டம்பர் மாதம்  ஒரு பெண்ணின் பெயரில் உருவாக்கிய போலி இன்ஸ்டாகிராம் கணக்கைப் பயன்படுத்தி சுமார் 30-40 இளம் பெண்களை வலையில் சிக்க வைத்து பணம் தருமாறு மிரட்டியுள்ளார்.
இவர் முதலில் சமூக வலைதளங்களில் 'லெஸ்பியன்' என அறிமுகம் செய்து ஏராளமான இளம் பெண்களுடன் பழகியுள்ளார்.அப்போது தன் பெயர் பிரதிக்ஷா என்றும், அவர் ஒரு லெஸ்பியன் உறவைத் தேடுவதாகவும் கூறி ஒரு நண்பர் கோரிக்கையை பல பெண்களுக்கு அனுப்பியிருந்தார்.மேலும்  சமூகம் தன்னை பாலியல் ரீதியாக அவமானப்படுத்துகிறது என்று பெண்களிடம்  கூறினார். பல பெண்களின்  நம்பிக்கையைப் பெற, அவர்  தனது நிர்வாணப் படங்கள் என்று போலியான படங்களை  அனுப்பினார்.பிறகு அந்த பெண்களை கவரும் வகையில், தான் மாடலிங் துறையில்  இருப்பதாகவும், இந்த துறையில்  இறங்க விரும்புவோருக்கு உதவி செய்ய முடியும் என்றும் பொய் சொல்லி, அவர்களிடம் இருந்து நிர்வாண படங்களை வாங்கி உள்ளார். இதை அடுத்து அந்த படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி லடச்சக்கணக்கில் பணம் பறித்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் அளித்த புகார் அடிப்படையில் போலீசார், பிரபஞ்ச் நாச்சப்பாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஒவ்வொரு படத்துக்கும் 4,000 ரூபாய் என இதுவரை 2 லட்சம் ரூபாய் வரை அவர் பெண்களிடம் இருந்து பறித்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.