முதல்வருக்கு சென்ற மாணவியின் பாலியல் புகார் கடிதம்

 
ச்

மாணவியின் பாலியல் புகார் கடிதம் முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ளதால் தென்காசி அரசு கலைக்கல்லூரில்  பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

 தென்காசியில் இயங்கி வரும் அரசு கலைக் கல்லூரியில் வணிகவியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறார் அந்த மாணவி.  அந்த  மாணவிக்கு வழிகாட்டியாக இருந்து வந்த பேராசிரியர் வேறு கல்லூரிக்கு மாறுதலாகி சென்றிருக்கிறார்.   ஆனாலும் மாணவி அதே கல்லூரியில் வணிகவியல் துறையில் ஆய்வு பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

ட்ஃப்

 வணிகவியல் துறையின் தலைவராக இருந்து வரும் அஜித் என்பவர் கடந்த ஏழு மாதங்களாக  பிஎச்டி மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவுகளை கொடுத்து வருவதாக புகார்.  

 இந்த நிலையில் பிஎச்டி மாணவி ஒருவர் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு கடிதம் எழுதி இருக்கிறார்.   அந்த புகார் கடிதத்தில்,   மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ஆய்வு அறையில் அமர்ந்து கொண்டு முகம் சுளிக்கின்ற வகையில் பேசியும் இரட்டை அர்த்தத்தில் பேசி வருகிறார் துறையின் தலைவர் அஜித். அறையில் மின் இணைப்புகளை நிறுத்திவிட்டு கதவையும் சாத்துகிறார்.   தன்னிடம் நேரடியாக வந்து ஆய்வு வழிகாட்டியை மாற்றி விட்டு அவருடன் வந்துவிட  வலியுறுத்தி வருகிறார்.  அவர் மனது வைத்தால் தான் ஆய்வு பணியை படிக்க  முடியும் என்று சொல்லி மிரட்டுகிறார் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது . 

இத்தனை குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ள அந்த மாணவி , இந்த கடிதத்தை படித்தவுடன் சம்பந்தப்பட்ட அந்த துறை தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

 மாணவிகளின் பாலியல் புகார் முதல்வரின் கவனத்திற்கு சென்றிருப்பதால் அந்த அரசு கல்லூரியில் சலசலப்பும் பரபரப்பும் ஏற்பட்டிருக்கிறது.