தாயின் கள்ளக்காதலனை கொலை செய்த மகன்- டாஸ்மாக்கில் அமர்ந்து உளறியதால் சிக்கினார்
நெல்லை மானூர் அருகே தாயுடன் தகாத உறவில் இருந்த வரை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம் மானூர் கம்மாளங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 50). இவர் அந்த பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவருக்கும் தகாத உறவு கடந்த சில ஆண்டுகளாக இருந்திருக்கிறது. இதை அடிக்கடி அந்தப் பெண்ணின் மகன் சுதர்சன் வயது 24, என்பவர் கண்டித்திருக்கிறார். இருந்த போதிலும் பெரும்பாலும் அந்த பெண்ணும் அதை கண்டு கொள்ளாமல் இருந்திருக்கின்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த சுதர்சன் இன்று மாலை நேரத்தில் கம்மாளன்குளம் பகுதியில் வீட்டிலிருந்த பெருமாளை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சென்று வெட்டிக்கொலை செய்தார்.
அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் சுதர்சன் மானூர் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்துள்ளார். அப்பொழுது தான் ஒருவரை கொலை செய்துவிட்டு இங்கே வந்திருப்பதாக அருகில் இருப்பவர்களிடம் கூறியிருக்கிறார். அந்த தகவலை அவர்கள் மானூர் காவல் நிலையத்திற்கு தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் டாஸ்மாக்கிற்கு வேகமாக வந்த காவல்துறையினர் சுதர்சனை கைது செய்து நடந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது

