நடிகை ராதிகா வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் மகன் கொலை

 
s

நடிகை ராதிகா வீட்டில் வேலை செய்யும் எழில்செல்வி என்பவரின் மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பண்ருட்டி அருகே சிறுவத்தூரை சேர்ந்த எழில்செல்வியின் மகன் பிரசாத்(19) கொலை செய்யப்பட்டார்.  சென்னையில் உள்ள நடிகை ராதிகா சரத்குமார் வீட்டில் வேலை செய்து வருகிறார் எழில் செல்வி. தாயை பார்க்க சென்னை செல்வதாக கூறி விட்டு சென்ற பிரசாத் வீடு திரும்பவில்லை. விசாரணையில் பிரசாத்தை அவரது நண்பர்கள் தேவராசு, தினேஷ் கொலை செய்தது கண்டுபிடிகக்கப்பட்டது. 

பொன்னேரி கடற்கரையில் பிரசாத்தை கொலை செய்து அங்கேயே புதைத்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தகராறு காரணமாக பிரசாத்தை கொலை செய்ததாக இருவரும் வாக்குமூலம்அளித்துள்ளனர். தனது மனைவியுடன் பிரஷாந்த் திருமணம் மீறிய உறவில் இருந்ததால் ஆத்திரமடைந்த வேதராசு என்பவர், தனது நண்பருடன் சேர்ந்து வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.