மது போதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகன்

 
murder murder

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே மது போதையில் பிவிசி பைபால் தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.

murder

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள குலமங்கலம் தெற்கு ஊராட்சி பூக்காரன் குடியிருப்பைச் சேர்ந்தவர் விஜயசுந்தரம் (65). இவரது மனைவி அன்னகொடி. இவர்களுக்கு சொக்கலிங்கம், வேலு, விஜயராகவன் ஆகிய மூன்று மகன்களும் ரேணுகாதேவி என்ற மகளும் உள்ளனர்.  இந்நிலையில் விஜயசுந்தரம் விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார். இவர்களது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் உள்ள  மரத்தில் மாடு ஒன்று கட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த இடத்திற்கு விஜய சுந்தரத்தின் மகன் வேலு வந்துள்ளார். இதனை அடுத்து வேலுவை பார்த்து விஜயசுந்தரம் மாட்டை ஏன் இன்னும் வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது வேலு மது போதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில் இதனால் வேலுவுக்கும் அவரது தந்தை விஜய சுந்தரத்திற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றிய நிலையில் அருகே இருந்த பிவிசி பைப்பை எடுத்து வேலூ அவரது தந்தை விஜயசுந்தரத்தின் தலையில் அடித்துள்ளார். பின்னர் விஜய சுந்தரம் தேக்கிய போது அவரை கீழே தள்ளி தலையில் ரத்தம் வலிய வலிய அடித்து உதைத்துள்ளார். பின்னர் விஜய சுந்தரத்தின் அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து படுகாயம் அடைந்த விஜய சுந்தரத்தை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனைத் தொடர்ந்து கீரமங்கலம் காவல்துறையினர் கொலை வழக்காக பதிவு செய்து தந்தையை அடித்துக் கொன்ற விஜய சுந்தரத்தின் மகனான வேலுவை கைது செய்தனர். மேலும் வேலுவிடம் விசாரணை நடத்தி வரக்கூடிய நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையிலும் காவல்துறையினர் அடைக்க உள்ளனர். இதற்கிடையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து விஜயசுந்தரத்தின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் தந்தையை மது போதையில் பிவிசி பைப்பால் மகன் அடித்துக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.