குடிபோதையில் தந்தையை மண்வெட்டியால் அடித்து கொன்ற மகன்

 
murder

குடிபோதையில் தந்தையை மண்வெட்டியால் அடித்து கொன்ற மகன்மணப்பாறை அருகே குடிபோதையில் மகன் மண்வெட்டியால் தாக்கியதில் தந்தை உயிரிழந்தார்.

murder


திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சங்கிப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது‌ 85). இவரது மகன் செல்வம் (வயது 57). இருவருக்கும் அடிக்கடி தகறாறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் குடிபோதையில் இருந்த செல்வம் தனது தந்தையுடன் தகறாறில் ஈடுபட்டு வீட்டில் இருந்த மண்வெட்டியால் தாக்கியதில் படுகாயமடைந்த சின்னத்தம்பியை அவரது மருமகள் மலர் என்பவர் மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளார். ஆனால் செல்லும் வழியில் உயிரிழந்ததால் சின்னத்தம்பியின் உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்று இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை செய்துள்ளனர். 

இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்காத நிலையில் ரகசிய தகவலின் அடிப்படையில் மணப்பாறை டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த சின்னத்தம்பியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையை மகன் மண்வெட்டியால் தாக்கிக் கொலை செய்த சம்பவம் மணப்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.