கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த தந்தையின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற மகன்

 
கடல் போல பெருகி வரும் கள்ளக்காதல் – பெண் ஊழியரோடு உல்லாசித்த உரிமையாளரும் கொலை-  உடல் ஆசையால் இருவரும் உலகை விட்டு போன  பரிதாபம் .

காரைக்குடி அருகே பெரியகோட்டையில் பரோட்டா மாஸ்டர் அடைக்கலத்தின் தலையில் கல்லை போட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். 

Youth beaten to death near Ramanathapuram - Mysterious mania

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பெரிய கோட்டையை சேர்ந்தவர் அடைக்கலம். இவரது மனைவி செல்லம்மாள். இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து மகன் முருகேசனுடன் வாழ்ந்துவருகிறார். அடைக்கலம், வேறு ஒரு பெண்ணை அழைத்துவந்து கள்ள உறவில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் அடைக்கலம்  மற்றும் அவரது மகனுக்கு இடையே பிரச்சனை நிலவி வந்துள்ளது. 


இந்நிலையில் நேற்று இரவு தலையில் பலத்த காயத்துடன் அடைக்கலம் இறந்து கிடந்தார். இதையறிணஅக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  அடைக்கலத்தை மகன் முருகேசன் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் சாக்கோட்டை  போலீசார் விசாரித்து வந்தனர். விசாரணையில் நள்ளிரவில் நடந்த தாக்குதலில், அடைக்கலம் கொல்லப்பட்டது தெரியவந்தது. இதேபோல் அடைக்கலம் திருப்பூரில் இருந்து அழைத்து வந்து இரண்டாவதாக திருமணம் முடித்து வாழ்ந்து வந்த சிவகாமிக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மகன் முருகேசன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடும்பத்தை பிரிந்த அடைக்கலம் திருப்பூரில் புரோட்டோ மாஸ்டராக வேலை செய்து வந்தார். கடந்த சில ஆண்டுளாக சொந்த ஊருக்கு வந்து சிவகாமியுடன் வாழ்ந்து வந்த நிலையில் கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.