நகைக்காக மாமியாரை கொன்ற மருமகன்

 
ச் ச்

தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டியில் இறந்த மனைவியின் நகைகளை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாமியாரை தள்ளி விட்டதில் மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாமியார் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். 

தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டி வடக்கு தெருவை சார்ந்தவர் சின்னையா இவரது மனைவி பாப்பா (75), இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், குழந்தைகள் அனைவருக்கும் திருமணமானதாலும், ஏற்கனவே சின்னையா உயிரிழந்ததால் பாப்பா மட்டும் அத்திமரப்பட்டியில் வசித்து வந்துள்ளார். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு பாப்பாவின் நான்காவது பெண் சுப்புராணி இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், அதேபோல மனைவி பிரிந்து வாழ்ந்து வந்த முத்தையாபுரம் ராஜீவ் நகரை சார்ந்த டிரைவர் லிங்கதுரை என்பவருக்கு இரண்டாம் தாரமாக கல்யாணம் நடைபெற்றுள்ளது. இருவருக்கும் குழந்தைகள் இல்லாத நிலையில் கடந்த மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு சுப்புராணி (40) உயிரிழந்தார்.

இந்நிலையில் இன்று மாமியார் வீட்டிற்கு வந்த மருமகன் லிங்கதுரை மனைவியின் நகையை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மாமியார் பாப்பாவை தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து பாப்பாவிற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.. தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடோடி வந்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாப்பா உயிரிழந்தார். இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவரான மருமகன் லிங்கத்துறையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாமியாரை மருமகன் தள்ளிவிட்டதில் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.