"மாணவிகளின் உடைகளை உருவி,உடலை தழுவி .."பள்ளி வகுப்பறையில் புகுந்த மர்ம நபரால் நேர்ந்த கொடுமை

 
school

ஒரு பள்ளிக்குள் வெளிநபர் ஒருவர் திடீரென புகுந்து 2 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது 

private school

டெல்லி பஜன்புரா பகுதியில் கிழக்கு டெல்லி மாநகராட்சி நிர்வாகத்தால் நடத்தப்படும் ஒரு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 5-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் பயில்கின்றனர்.
இந்த பள்ளியில் கடந்த மாதம் 30-ந்தேதி காலை பிரார்த்தனை முடிந்தபின் ஒரு வகுப்பறையில் மாணவர்கள் ஆசிரியர் வருகைக்காக காத்திருந்தனர். அப்போது திடீரென வெளிநபர் ஒருவர் அந்த வகுப்பறைக்குள் புகுந்தார்.பின்னர் அந்த வகுப்பிலிருந்த மாணவிகளின் உடைகளை உருவி ,அவரும் ஆடையில்லாமல் நின்று அங்கிருந்த இரண்டு மாணவிகளை கட்டி பிடித்து பாலியல் சீண்டல் செய்தார் .
அதன் பின்னர் அந்த கிளாஸ் ரூமிலேயே சிறுநீர் கழித்து விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார் .இது பற்றி பாதிக்கப்பட்ட மாணவிகள் பள்ளி நிர்வாகத்திடம் புகாரளித்தும் அவர்கள் நடவடிக்கையெடுக்காததில் ,மாணவிகளின் பெற்றோர்  டெல்லி மகளிர் ஆணையத்தில் புகார் கூறினர் .அவர்கள் இந்த விஷயத்தில் நடவடிக்கையெடுக்க அங்குள்ள போலீசில் புகார் கொடுத்ததும் போலீசார் அந்த பள்ளியில் பாலியல் தொல்லை கொடுத்தவர்களை  பிடிக்க நடவடிக்கையெடுத்து வருகின்றனர் .