ஆசை பட பாணியில் மனைவி, மகனை கொன்ற சாப்ட்வேர் நிறுவன ஊழியர்

 
aஅ

 ஆசை திரைப்பட பாணியில் மனைவி, மகனை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் ஊழியர்.  பகுதியில் நடந்திருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம்

 மகாராஷ்டிரா மாநிலம் புனே அவுந்த் பகுதியில் வசித்து வந்தவர் சுதீப்தோ கங்குலி.   44 வயதான இந்த வாலிபர் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்திருக்கிறார்.   இவரின் மனைவி பிரியங்கா.   இத்தம்பதிக்கு எட்டு வயதில் மகன் இருந்துள்ளார் .  

அ

சுதீப்தோ கங்குலியின் தம்பி பெங்களூருவில் வசித்து வருகிறார்.  அவர் அண்ணன்,  அண்ணிக்கு பலமுறை போன் செய்திருக்கிறார் . பலமுறை போன் செய்தும் இருவரும் எடுக்கவில்லை என்பதால், புனேவில் வசித்து வரும்  நண்பருக்கு போன் செய்து அண்ணன் வீட்டிற்கு சென்று பார்த்து வரும்படி சொல்லி இருக்கிறார்.

 அந்த நபர் சென்று பார்த்த போது வீடு பூட்டி இருந்திருக்கிறது.   இருவரும் செல்போனை எடுக்கவில்லை .  வீடும் பூட்டி இருந்ததால் இது குறித்து போலீசுக்கு புகார் அளித்திருக்கிறார்.   பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வீட்டிற்கு வந்து மாற்றுச்சாவி மூலம் வீட்டை திறந்து உள்ளே சென்று இருக்கிறார்கள்.   அப்போது அது அனைவரும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.  

 பிரியங்காவும் அவரது மகனும் தலையில் பிளாஸ்டிக் பை மூடிய நிலையில் சடலமாக கிடந்திருக்கிறார்கள்.   மனைவி , மகனின் முகத்தில் பிளாஸ்டிக் பையினை மூடி கட்டி அவர்களை மூச்சு திணறடித்து கொலை செய்துவிட்டு பின்னர் தான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் சுதீப்தோ கங்குலி  என்பது தெரிய வந்திருக்கிறது.

 மூன்று பேரின் உடலையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர் .  சுதீப்தோ கங்குலி,  தான் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு சொந்தமாக தொழில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்.   மற்றபடி வீட்டிலிருந்து கொலை மற்றும் தற்கொலைக்கான கடிதங்கள் எதுவும் சிக்கவில்லை.  போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலை மற்றும் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.