செங்கல்பட்டில் அதிர்ச்சி! தூங்கிக்கொண்டிருந்த இளைஞர் வெட்டி கொலை

 
ச் ச்

செங்கல்பட்டு அருகே வாடகை அறையில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படு்த்தியுள்ளது.

ச்


செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த திருத்தேரி பகுதியில் திருநெல்வேலியைச் சேர்ந்த பாரதி கண்ணன் (30) மற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜன் (28) ஆகியோர் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தனர். இருவரும் ஒரகடத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தனர். அதில் பாரதி கண்ணன் மட்டும் சில தினங்களாக வேலையில்லாமல் (ZOMATO ) டெலிவரி வேலை செய்து வந்துள்ளார். நேற்று நள்ளிரவு, அவர்கள் தங்கள் அறையில் தூங்கிக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத சில நபர்கள் அவர்களைத் தாக்கியுள்ளனர். தாக்குதலில் பாரதி கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜனின் முகத்தில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. அவர் உடனடியாக மீட்கப்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இந்த தாக்குதலில் பீர் பாட்டில் மற்றும் கத்தி பயன்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலுக்கான காரணம் மற்றும் குற்றவாளிகள் யார் என்பது குறித்து மறைமலைநகர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிங்கப்பெருமாள் கோவில் அருகே டெலிவரி ஊழியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

Advertisement