நகைக்காக தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டி கழுத்தறுத்து கொலை

 
murder

மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே ஏழுபரனைக்காடு கிராமத்தில் இன்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, அவரது கழுத்திலிருந்து 10 சவரன்  தங்க சங்கிலி  மற்றும் வீட்டிலிருந்த பணம்  1 லட்சத்து 10 ஆயிரம் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

murder

சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள  ஏழுபரணைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராமசாமி (70). இவரது மனைவி அத்தாயம்மாள்(65). இவர்களுக்கு மல்லிகா (45)என்ற மகளும், பிரகாஷ்(40)என்ற மகனும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. நேற்று இரவு விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் அத்தாயம்மாள்(65) உறங்கிக் கொண்டிருந்தார். பக்கத்தில் உள்ள கொட்டகையில் ராமசாமி உறங்கிக் கொண்டிருந்தார்.

இன்று அதிகாலை அத்தாயம்மாள் கட்டிலில் படுத்த நிலையில் கழுத்து  அறுக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரது கழுத்தில் அணிந்திருந்த எட்டு பவுன் தங்க நகை , மற்றும் வீட்டினுள் இருந்த  பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்து ரொக்க பணம் ஒரு லட்சத்து 10 ஆயிரம்  கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. தகவல் அறிந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், ஓமலூர் காவல் துணை கண்காணிப்பாளர் சங்கீதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் துப்பறியும் மோப்பநாய் உதவியுடன் போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர். மேலும் மேற்கு மண்டல ஐஜி பவானிஸ்வரி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.  

கொளத்தூர் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையான அத்தாயம்மாள் மகன் பிரபாகரனுக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி கவிதா கள்ளக்காதலனுடன் சென்று விட்டதால் பிரபாகரன், தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த தங்கமணி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது மனைவி தங்கமணியும் பிரபாகரனும் ஏற்கனவே தனது பெற்றோர்களை மிரட்டி சொத்துக்களை விற்று 26 லட்சத்தை பெற்றுக் கொண்டுள்ளனர். மேலும் உள்ள சொத்துக்களை விற்று தங்களுக்கு பணம் தர வேண்டும் என்று தங்கமணியும், பிரகாசமும் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. 

murder

இதனால் போலீசாருக்கு பிரகாஷ் , தங்கமணி ஆகியோர் மீதும்  சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் வனப்பகுதியை ஒட்டி, வீடு இருப்பதால் திட்டமிட்டு கொள்ளையர்கள் யாரேனும் வந்து கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.