"டேய் தகப்பா ,அம்பது வயசு பொம்பளைய வச்சிருக்கியாமே" -அடுத்து பிள்ளைகள் செஞ்ச காரியம்.

 
murder


தந்தையின் கள்ள காதலியை அவரின் பிள்ளைகளே கொலை செய்த சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது 

Pune murder
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள பாரமதியில் வசிக்கும் 34 வயதான ருஷிகேஷ் பத்தரே மற்றும் 33 வயதான அவரது சகோதரி அனுஜா ஆகிய இருவரும் தங்களின் தந்தையுடன் வசித்து வந்தனர் .இந்நிலையில் அந்த பிள்ளைகளின் தந்தைக்கு பாரமதியின் கஸ்பா பகுதியில் வசிக்கும் 50 வயதான  ஸ்வாதி அகவன் என்ற பெண்ணோடு கள்ள தொடர்பு ஏற்பட்டுள்ளது 
இதனால் அந்த சகோதர சகோதரிகள் இருவரும் தங்கள் தந்தை மீது கடும் கோவத்தில் இருந்தனர் .அதனால் அந்த தந்தையுடன் உறவில் இருக்கும்  அந்த 50 வயதான ஸ்வாதியை கொலை செய்ய முடிவெடுத்தனர் .இதற்கிடையே கடந்த நவம்பர் 10 ஆம் தேதி இரவு அந்த பெண்ணுடன்  தங்கள் தந்தை இருப்பதை பார்த்த அவர்கள் அங்கே இருவரிடமும் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்ட பிறகு , அந்த இருவரையும் அங்கிருந்த ஒரு கட்டையால் தாக்கினர் .இந்த தாக்குதலில் அந்த பெண் இறந்து போனார் .பிறகு அவர்கள் தங்களின் குடும்ப மருத்துவரிடம் அந்த பெண்ணின் சடலத்தை காமித்து மாரடைப்பால் இறந்ததாக கூறினர் .ஆனால் சந்தேகப்பட்ட  அந்த டாக்டர் அந்த பெண்னின் உடலை பரிசோதனைக்கு அனுப்ப சொன்னார்  .ஆனால் அவர்கள் அந்த பெண்ணின் உடலை  அடக்கம் செய்து விட்டனர் .பிறகு இறந்த பெண்ணின் பிள்ளைகளின் புகாரின் பேரில் போலீஸ் வழக்கு பதிவு  செய்து அந்த இருவரையும் விசாரித்து கைது செய்தனர் .