15,16 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - வாலிபருக்கு 14 ஆண்டுகள் சிறை

 
s

பக்கத்து வீட்டில் வசித்து வந்த 15, 16 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

 அரியலூர் மாவட்டத்தில் உடையார்பாளையம் அருகே உள்ளது மேலணிக்குழி கிராமம்.   இக்கிராமத்தில் வசித்து வந்தவர் சுப்பிரமணியன்.  40 வயதான இந்த வாலிபர் தன் வீட்டுக்கு அருகில் வசித்து வந்த 15 ,16 வயது உள்ள இரண்டு சிறுமிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.  இதில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்கள் பெற்றோரிடம் இது குறித்து சொல்லி அழுது இருக்கிறார்கள்.

ம

 இதைக் கேட்டு கடும் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.  இந்த புகாரின் பேரில் சுப்பிரமணியன் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.  பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

 கடந்த 2021 ஆம் ஆண்டில் நடந்த இந்த  சம்பவத்தில் வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.   இந்த வழக்கில் விசாரணைகள் முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டு இருக்கிறது.

 சுப்பிரமணியன் குற்றவாளி என்பதை உறுதி செய்த நீதிபதி ஆனந்தன்,  அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார் .  மேலும்,  4 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்து இருக்கிறார்.   இதை அடுத்து சுப்பிரமணியனை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.