சென்னையில் அதிர்ச்சி... மது வாங்கிக்கொடுத்து ஆடையை அவிழ்க்க சொல்லி பாலியல் துன்புறுத்தல்! கதறும் சிறுவர்கள்
பள்ளி சிறுவர்களுக்கு மது உட்பட போதைப்பொருள் வாங்கி கொடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருமங்கலம் பகுதியில் பிரபல பள்ளியில் பயிலும் (KV) ஏழாம் வகுப்பு பயின்று வரும் 12 வயது சிறுவன், போதையில் தள்ளாடியபடி வீட்டிற்கு வந்ததால், சிறுவனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வயதில் உனக்கு போதை பழக்கமா? யாருடன் சென்று குடித்தாய் எனக்கேட்டு சிறுவனை அவனது தந்தை அடிக்க, சிறுவன் தன்னை இரண்டு அண்ணன்கள் அழைத்துச் சென்று குடிக்க வைத்ததாகவும், வேறு ஏதோ சில போதைப் பொருட்களை எல்லாம் கொடுத்ததாகவும், பின்னர் தனது ஆடைகளை அவிழ்க்கச் சொல்லி பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ந்த சிறுவனின் பெற்றோர் 1098 - சிறார் உதவி எண்ணிற்கு படைக்க அதன் மூலம் சைல்ட் வெல்ஃபேர் கமிட்டியை சேர்ந்த முகேஷ் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அளித்துள்ளனர். பிறகு, சிறுவனிடம் விசாரித்தபோது, அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் 15 வயது சிறுவன் தான் தன்னை அழைத்துச் சென்றார் என்று தெரிவிக்க, அதன்படி அந்தப் பதினைந்து வயது சிறுவனையும் அடைத்து விசாரிக்கையில் தடுக்கிடும் தகவல் வெளியானது.

பத்தாம் வகுப்பு பயிலும் 15 வயது சிறுவனையும் ஆரம்பத்தில் பள்ளி முடிந்து ஒரு நாள் சென்றபோது இரண்டு இளைஞர்கள் அவரிடம் நைசாக பேசி அவர்கள் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு கூல்ட்ரிங்ஸ் என மதுவை குடிக்க வைத்து போதை ஆக்கியதாகவும் அதை வீடியோ பதிவு செய்து வைத்துக் கொண்டு இதைப் பற்றி யாரிடமும் தெரிவிக்க கூடாது என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அப்போது பத்தாம் வகுப்பு சிறுவனை பாலியல் ரீதியாக இருவரும் துன்புறுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர். அதன் பிறகு அவ்வப்போது அந்த சிறுவனை அழைத்துச் சென்று மது மற்றும் போதை வஸ்துகளை கொடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்து வந்த நிலையில், நாளடைவில் அந்த சிறுவன் போதை பழக்கத்தை நாடி செல்லும் வகையில் மதி மயங்கி சென்றுள்ளான்.
பாலியல் வக்கிரம் கொண்ட அந்த இரண்டு இளைஞர்களும், பத்தாம் வகுப்பு சிறுவன் மூலம் அதை பள்ளியில் பயிலும் மற்ற சிறுவர்களையும் வரவழைக்க திட்டமிட்டு ஏழாம் வகுப்பு வயிலும் சிறுவனையும் அதன்படி தான் அழைத்து வந்துள்ளனர். அவர்கள் சொன்ன அடையாளங்களை வைத்து இருப்பிடத்தை தேடிச் சென்ற திருமங்கலம் போலீசார் என்.வி.என். நகர் பகுதியில் வசித்து வந்த பாரி அரசன் மற்றும் சஞ்சய் ஆகிய இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இருவரும், ஓரினச் சேர்க்கையாளர்கள் என்றும், போதை பழக்கத்திற்கு அடிமையான இருவரும் பள்ளி சிறுவர்களுக்கு மது, கஞ்சா போன்ற போதை பொருட்களை கொடுத்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதை ஒப்புக்கொண்டனர். இதேபோன்று மேலும் பள்ளிச் சிறுவர்களை இவர்களால் பாதிக்கப்பட்டுள்ளார்களா எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

