தவெக நிர்வாகி மீது இளம்பெண் பாலியல் புகார்
காரமடை தவெக நிர்வாகி கருப்பசாமி மீது அதே கட்சியை சேந்த பெண் பாலியல் புகார் அளித்துள்ளார்.

தவெக ஒன்றியச் செயலாளர் கருப்பசாமி தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அக்கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் நேற்று கோவை ஆட்சியரிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவிட்டதை அடுத்து, டிஎஸ்பி-யான பாஸ்கர் தலைமையிலான போலீஸார் பெண் நிர்வாகியின் வீட்டிற்கே நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதனையடுத்து கருப்பசாமி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து கூறியுள்ள பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன், "காரமடையில் தவெக ஒன்றியச் செயலாளர் கருப்பசாமி தனக்கு பா*யல் தொல்லை அளித்ததாகவும், கொ*மிரட்டல் விடுத்ததாகவும் பெண் நிர்வாகி ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சொந்தக் கட்சிக்குள்ளேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில், தமிழகப் பெண்களுக்கு தவெக எப்படிப் பாதுகாப்பு அளிக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

