கல்லூரி கேண்டீனில் பெண் பாலியல் வன்கொடுமை- 3 பேர் கைது
சென்னை நந்தனம் கல்லூரி வளாக கேண்டீனில் பணிபுரிந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே 22 வயது இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை அளிக்கிறது. அண்மையில் கல்லூரியில் உள்ள உணவகத்தில் பணிக்குச் சேர்ந்த இளம் பெண்ணை, உணவகத்தை நடத்திவந்த முத்துச்செல்வம் அங்கு பணிபுரிந்த குணசேகரன், கார்த்திகேயன் ஆகியோர் வேலைக்கு வந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கல்லூரியின் காவலாளி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட பெண் வேலைக்காக வெளியூரில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளார். அரசு கல்லூரிகளில் முறையான கண்காணிப்பு கேமராக்களோ அல்லது தகுந்த பாதுகாப்பு ஊழியர்களோ இல்லாததே குற்றத்திற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன.


