பிளஸ்டூ மாணவிகள் புகாரில் பள்ளி தாளாளர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு

 
p

பிளஸ் டூ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

 நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம் பகுதியில் இயங்கி வருகிறது அரசு உதவி பெறும் பள்ளி.   அந்த பள்ளியின் தாளாளராக இருந்தவர் குதுப்புன் நஜீப்.   47 வயதான இவர் பிளஸ் டூ மாணவிகளின் உடலில் பல இடங்களில் தொட்டு தொட்டு பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.   இதை கண்டு அதிர்ந்து போன மாணவிகள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்கள்.   ஆனால் அந்த புகாரின் பேரில் பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்திருக்கிறது .

na

இதை அடுத்து மாணவிகள் பெற்றோரிடம் சொல்ல பெற்றோர்கள் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் கிழக்கு பதிவு செய்த போலீசார் பள்ளியின் தாளாளர் குதுப்புன் நஜீப் இடம் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர்.

 மாணவிகள் புகார் அளித்தும் அந்த சம்பவத்தின் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல் போலீசிடமும் புகார் அளிக்காமல் அந்த குற்றத்தை மறைத்ததால் பள்ளி தலைமை ஆசிரியை காதரம்மாள் தாளாளரின் மனைவி முகம்மது பாத்திமா ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். 

அதன் பின்னர் பள்ளியின் தாளாளர் குதுப்புன் நஜீப் பாலியல் வழக்கில் சிக்கியதை எடுத்து அவர் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.   

இந்த நிலையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைதான குதுப்புன் நஜீப்பை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க நெல்லை கிழக்குத் துணை காவல் ஆணையர் பரிந்துரைத்திருந்தார்.   அந்த பரிந்துரையின் படி குதுப்புன் நஜிப்   குண்டம் சட்டத்தில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.