மனைவியை கிண்டல் செய்ததால் இளைஞரை கொலை செய்த கணவர்
திருவள்ளூர் அருகே இளைஞர் சந்தேக மரணத்தில் திடீர் திருப்பம் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் அடித்து கொலை செய்திருக்கலாம் என மருத்துவர் தெரிவித்ததால் போலீசார் விசாரணை முடக்கியதில் நண்பர் மனைவியிடம் அடிக்கடி பேசுவதை கண்டித்தும் அவர் தொடர்ந்து பேசியதால் அடித்து கொலை செய்து சடலத்தை வீசியது அம்பலமாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே உள்ள புலியூர் கண்டிகை கிராமம், பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்தவர் அருண்குமார்(வயது28) வெல்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு தேவி(வயது25) என்ற மனைவியும், லக்சித்தா(வயது4), ஜெஸ்விதா(வயது2) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் குடி போதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில்,கடந்த 25-ந் தேதி அருண்குமார் புலியூர் கண்டிகை கிராம எல்லையில் வயல்வெளியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
வெங்கல் காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். பிரேத பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர் அவர் அடித்து கொன்றதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறியதை தொடர்ந்து போலீசார் விசாரணை முடிக்கினர். அருண்குமார் கடைசியாக இறப்பதற்கு முன்பு அவர் யார் யாரிடம் தொலைபேசியில் பேசினார் என்பது குறித்து செல்போன் தரவுகளை போலீசார் ஆராய்ந்தனர். அதில் தனது நண்பர் ஆனந்தன் செல்போன்
எண்ணிலிருந்து கடைசியாக வந்த தொடர்பு எண்ணை போலீசார் ஆய்வு செய்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆனந்தன் தனது மனைவியை அருண்குமார் அடிக்கடி பேசி கிண்டல் செய்து வந்ததை பலமுறை கண்டித்தும் அவர் தொடர்ந்ததால், கடந்த 24 ஆம் தேதி அன்று திருநின்றவூர் பகுதியில் அவரை தனது நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்து கட்டுவதற்காக மது வாங்கி கொடுத்து குடிக்க வைத்து அதிக போதையில் இருந்த அவரை அடித்து நண்பர்களுடன் இணைந்து கொலை செய்து அவர் உடலை புலியூர் கண்டிகை பகுதியில் ஒதுக்குப்புறமாக வீசிவிட்டு சென்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து இந்த கொலையில் சம்பந்தப்பட்ட ஆனந்தன் நண்பர்களான திருநின்றவூர்,ராமநாதபுரம் பகுதியைச்சேர்ந்த அஜித்(வயது29),அயத்தூர், மேட்டு காலனி அஜித்குமார்(வயது28), நடுக்குத்தகை,குமரன் தெரு சரவணன்(வயது30) ஆகியோர்களை உங்கள் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

