மனைவியிடமிருந்து காப்பாற்றுங்கள்! கடித்து குதறியதால் கணவர் போலீசில் கதறல்

ஆண் நண்பர்களுடன் பழகுவதை கண்டித்ததால் ஆத்திரமடைந்து கணவனின் அந்தரங்கப் பகுதியை கடித்து குதறி இருக்கிறார் மனைவி. இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணவருக்கு அந்தரங்கப் பகுதியில் மூன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. இதனால் மனைவியிடமிருந்து தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று போலீசில் புகார் அளித்திருக்கிறார் கணவர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உம்மத்கர் பன்சி என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுராஜ் குஜ்வாஹா. இவரின் மனைவி ராஜகுமாரி . திருமணத்திற்கு பின்னர் மனைவியின் நடத்தை சரியில்லை என்றும், தினமும் வீட்டிற்கு தெரியாதவர்களை அழைத்து வந்து பேசிக் கொண்டிருக்கிறார் என்றும் கவலை கொண்டிருக்கிறார் ரகுராஜ்.
முதலில் அவரின் உறவினர்களாக இருக்கலாம் என்று நினைத்து இருந்திருக்கிறார் ரகுராஜ் . ஆனால் முகம் தெரியாத அந்நியர்கள் பலரும் வீட்டிற்கு வந்து சென்றிருக்கிறார்கள். அப்போதுதான் அது மனைவியின் ஆண் நண்பர்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. தெரியாதவர்கள் இப்படி வீட்டுக்கு வந்து போவது சரியில்லை என்று மனைவியிடம் பலமுறை எச்சரித்திருக்கிறார். ஆனால் அவர் அதை பற்றி கேட்காமல் தொடர்ந்து ஆண் நண்பர்களுடன் பழகி வந்திருக்கிறார்.
இதை தட்டி கேட்டதால் ரகுராஜ் குடும்பத்தினரை பொய் வழக்கில் சிக்க வைத்து விடுவேன் என்று மிரட்டி வந்திருக்கிறார். அப்படியும் கேட்காமல் மனைவியை திட்டியதால் ரகுராஜின் 75 வயதான தந்தை கல்யாண் சிங் மீது மானபங்க புகார் கொடுத்து இருக்கிறார். இதில் கடும் ஆத்திரமடைந்த ரகுராஜ் , மனைவி ராஜகுமாரியை கடுமையாக திட்டி இருக்கிறார். அதில் ஆத்திரம் அடைந்து கணவரின் அந்தரங்க பகுதியை கடித்து குதறி இருக்கிறார்.
இதில் படுகாயம் அடைந்து அலறி கிடந்தவரை உறவினர்கள் மொரீனா மாவட்ட மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள் . அங்கே இருந்து மேல் சிகிச்சைக்காக குவாலியர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். குவாலியர் மருத்துவமனையில் ரகுராஜ் அந்தரங்க பகுதியில் 3 அறுவை சிகிச்சை செய்துள்ளனர் மருத்துவர்கள். இதன் பின்னர் மனைவியால் தனக்கும் தன் குடும்பத்திற்கும் ஆபத்து இருக்கிறது என்று மனைவியிடம் இருந்து தங்களை பாதுகாத்து கொடுக்க வேண்டும் என்று காவல் உயர் அதிகாரியிடம் புகார் அளித்திருக்கிறார். இந்த புகாரின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக ரகுராஜ்க்கு உறுதியளித்திருக்கிறார்.