`ஜுன் 19ல் என்ன நடந்தது?!’- பென்னீக்ஸின் தாய், சகோதரிகளிடம் சிபிஐ விசாரணை

 

`ஜுன் 19ல் என்ன நடந்தது?!’- பென்னீக்ஸின் தாய், சகோதரிகளிடம் சிபிஐ விசாரணை

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் காவல்துறையினரால் கொல்லப்பட்ட வழக்கில் சிபிஐ இன்று விசாரணையை தொடங்கியுள்ளது. ஜுன் 19ம் தேதி என்ன நடந்தது என்து குறித்து ஜெயராஜின் மனைவி, மகள்களிடம் கேட்டு வாக்குமூலமாக சிபிஐ பதிவு செய்து வருகிறது.

`ஜுன் 19ல் என்ன நடந்தது?!’- பென்னீக்ஸின் தாய், சகோதரிகளிடம் சிபிஐ விசாரணை

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னீக்ஸ் ஆகியோர், ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட அதிக நேரம் கடையை திறந்துவைத்திருந்ததாக காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இரவில் இரண்டு பேரையும் காவல்துறையினர் கடுமையாக தாக்கியதாக கூறப்பட்டது. இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட இரண்டு பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தொடர்பாக சிபிசிஐ காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் 7 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழுவினர் நேற்று மதுரை வந்தனர். அங்கிருந்து கார் மூலம் தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்க வந்தனர். அங்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் முன்னிலையில், இந்த வழக்கு விசாரணை அதிகாரியான துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார், வழக்கு ஆவணங்களை சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லாவிடம் ஒப்படைத்தார்.

`ஜுன் 19ல் என்ன நடந்தது?!’- பென்னீக்ஸின் தாய், சகோதரிகளிடம் சிபிஐ விசாரணை

இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள், சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினரிடம் வழக்கு தொடர்பாக சில தகவல்கள் குறித்து விசாரணை நடத்தினர். அதன்பிறகு சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் சேகரித்த விசாரணை ஆவணங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்கள், சாத்தான்குளம் போலீஸ் நிலையம், அரசு மருத்துவமனை, கோவில்பட்டி சிறை உள்ளிட்ட இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், தடயங்களை ஒவ்வொன்றாக பார்வையிட்டு சரிபார்த்தனர்.

வாக்குமூலங்களை ஒவ்வொரு பக்கமாக பார்த்து பதிவு செய்து கொண்டனர். இந்த பணி இரவு 9 மணி வரை நீடித்தது. மேலும், சி.பி.ஐ. அதிகாரிகள் சம்பவம் நடந்த இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளனர். அதேபோன்று கைது செய்யப்பட்ட 10 காவலர்களையும் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டு உள்ளனர். இதற்காக மதுரை நீதிமன்றத்தில் சி.பி.ஐ. சார்பில் விரைவில் மனுதாக்கல் செய்ய உள்ளதாக போலீஸ் வட்டாரம் தெரிவிக்கின்றன.

`ஜுன் 19ல் என்ன நடந்தது?!’- பென்னீக்ஸின் தாய், சகோதரிகளிடம் சிபிஐ விசாரணை

இதனிடையே, சாத்தான்குளம் சென்ற சிபிஐ அதிகாரிகள், ஜெயராஜ், பென்னீக்ஸ் வீட்டில் முதல்கட்ட விசாரணை தொடங்கினர். ஜெயராஜின் மனைவி மற்றும் மகள்களிடம் விசாரணை நடைபெற்றது. கடந்த 19ம் தேதி என்ன நடந்தது என்பது குறித்து அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளர். அப்போது, நடந்தை அவர்கள் கூறிவருகின்றனர். இதனை அதிகாரிகள் வாக்குமூலமாக பதிவு செய்து வருகின்றனர். சிபிஐ விசாரணை விரைவுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த வழக்கு சூடுபிடித்துள்ளது.