திண்டிவனத்தில் தனியார் நிறுவனம் நடத்தி ரூ.85 கோடி மோசடி- இருவர் கைது

 
மோசடி

திண்டிவனத்தில் இரட்டிப்பு பணம் வழங்குவதாக கூறி விழுப்புரம் மாவட்டத்தில் 7000 பேரிடம் ரூ.85 கோடி பணம் மோசடி செய்த விவகாரத்தில், நிதி நிறுவன இயக்குனர் பிரபாவதி உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரூ.85 கோடி மோசடி - 2 பேர் கைது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே வேளாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் மண்ணுலிங்கம். இவர் அண்மையில் விழுப்புரம் எஸ்பி ஸ்ரீநாதாவிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் விநாயகபுரத்தைச் சேர்ந்த மாயக்கிருஷ்ணன் அவரது மனைவி பிரபாவதி மற்றும் மஞ்சுளா, கௌதம், மதிவாணன், முருகன், வீரமணி, செந்தில்குமார்,அன்பு ஆகியோர் சேர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு த கிரேட் இந்தியா மார்கெட்டிங் கம்பெனி என்ற தனியார் நிதி நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தி வந்தனர். 

அதில் ரூ.50,000 செலுத்தினால் 10 மாதத்தில் ரூ.90 ஆயிரம் வழங்கப்படும், ரூ.2 லட்சம் செலுத்தினால் ரூ.3.60 லட்சம் வழங்கப்படும் என்று ஆசை வார்த்தைகளை நம்பி விழுப்புரம் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம், புதுவை மாநிலம் என 7 ஆயிரம் பேர் பணம் கட்டிவந்துள்ளனர். அதேபோல் நம்பிய மன்னுலிங்கம் அவருக்கு தெரிஞ்ச 9 பேரை சேர்த்து மொத்தம் ரூ.55 லட்சம் பணத்தை கட்டியுள்ளனர். இதற்காக வாரந் தோறும் திண்டிவனத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று இந்த தவணைகளை செலுத்தி வந்துள்ளனர்.
 
இந்த நிலையில் மாயா கிருஷ்ணன் நடத்தி வந்த அலுவலகம் கடந்த நவம்பர் மாதம் திடீரென பூட்டு போட்டுக் கிடந்தது. அதன் பின்னர்  அவர்கள் தலைமறைவானதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தான் தெரியவந்தது இரட்டிப்பு பணம் தருவகதாகக்கூறி ஆசை வார்த்தைகளை கூறி பல கோடி மோசடியில் ஈடுபட்டது. இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த எஸ்பி ஸ்ரீநாதா உத்தரவிட்டார். அதன்படி போலீசார் நடத்திய விசாரணையில், இவர்களைப் போன்று சுமார் 7000 பேரிடம் ரூ.85 கோடி வரை பெற்றுக் கொண்டு தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது. இது குறித்து மாயா கிருஷ்ணன் உள்ளிட்ட 9 பேர் மீதும் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இதனிடையே தலைமறைவாக இருந்த நிதிநிறுவன நிர்வாக இயக்குனர் மாயகிருஷ்ணன் மனைவி பிரபாவதி (36) ( இயக்குனர் நிதி நிறுவம்) மாயகிருஷ்ணன் சகோதர் அன்பு(50)  இருவரையும்   கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இரண்டு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் நிதிநிறுவன மேலான் இயக்குனர்(MD) மாயகிருஷ்ணன், உள்ளிட்ட மற்ற 5 பேரை தேடி தனிப்படை போலிசார் சென்னை சென்று குடும்ப உறுப்பினர்களிடம் விசாரனை செய்து வருகின்றனர்.