ரவுடி ராபர்ட் வெட்டிக் கொலை! 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

 
murder

சென்னையில் ரவுடி சின்ன ராபர்ட் ஆறு பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணா நகர் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் ரவுடி சின்ன ராபர்ட்(28). இவர் மீது கொலை வழிப்பறி என மொத்தம் 16 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். ’B’ கேட்டகிரி ரவுடியாக இருந்த சின்ன ராபர்ட்டை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் போலீசார் ‘A’ கேட்டகிரி பட்டியலில் சேர்த்தனர். இந்த நிலையில் இன்று மாலை அன்னை சத்யா நகர் முதல் தெருவில் சின்ன ராபர்ட் நின்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் தலையில் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பினர்.

முதற்கட்ட விசாரணையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இவரது நண்பர் கோகுலை, அயனாவரத்தைச் சேர்ந்த லோகு தரப்பு கொலை செய்துள்ளது. தனது நண்பன் கொலைக்கு பழிக்கு பழி வாங்க சின்ன ராபர்ட் காத்திருந்துள்ளார். ஆனால் அதற்குள் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அயனாவரம் லோகு கும்பலைச் சேர்ந்தவர்கள்தான் இந்த கொலையை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தற்போது விசாரணையை தொடங்கியுள்ளனர்.