இட்லி கடை பெண்ணுடன் பழகுவதில் ஏற்பட்ட மோதல்- ரவுடிக்கு நேர்ந்த கொடுமை

 
murder

இட்லி கடை பெண்ணுடன் பழகுவதில் ஏற்பட்ட மோதலால் கஞ்சா வியாபாரியை சக நண்பர்களே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

murder


சென்னையை அடுத்த தாம்பரம் பைபாஸ் சாலையோரம் முட்புதரில் கடந்த 9.2.2022 தேதியன்று, வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு மூட்டையில் அழுகிய நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து "மேகா" எனும்  பெயர் மட்டும் கையில் பச்சை குத்திய அடையாளம் இருந்த நிலையில், அதனை  புகைப்படம் எடுத்த போலீசார், காவல் நிலைய தகவல் பலகையில் ஒட்டினர். மேலும் குற்ற ஆவண காப்பகத்திற்கும் அனுப்பிய நிலையில் அந்த நபர் யார் என்று தெரியாமல் போலீசார் விசாரணை செய்து வந்தனர். 

இதனிடையே சென்னை பெரியார் நகரை சேர்ந்த பல்லு கார்த்திக் (38) என்பவர் காணவில்லை என காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர் மீது, கொலை முயற்சி, வழிப்பறி மற்றும்  குண்டர் சட்டத்தில் சிறை என பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் பெரவள்ளூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியாக கார்த்திக் வலம்வந்துள்ளார்.

murder

இதனையடுத்து குற்ற ஆவண காப்பகத்தில் மேகா எனும் பச்சை குத்திய நபரின் உடல் தாம்பரம் காவல் எல்லையில் கிடைத்த தகவலின் பேரில், தாம்பரம்  போலீசாருக்கு தகவல் வர தாம்பரம் உதவி ஆணையாளர் சீனிவாசன் உத்திரவின் பேரில் ஆய்வாளர் சார்லஸ் மேற்பார்வையில் நடத்தப்பட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் கார்திக் என்பது தெரியவந்தது. 

கொலையான  கார்த்திக்  மேகா என்ற பெண்ணை திருமணம் செய்து பிரிந்த நிலையில், மதுரவாயில் கங்கா நகரில் தங்கி சக சிறையில் பழக்கமான சதாம், அருண், சரவணன் ஆகியோருடன் பழகி கஞ்சா விற்பனையில்  ஈடுபட்டதும்  தெரிய வந்தது. மேலும் தாம்பரம் போலீசார்  மூன்று பேரை பிடித்து காவல் துறை மரியாதையுடன் கிடுக்கு பிடி விசாரணையில் ஈடுபட்டதில், மூவரும் சேர்ந்து கார்த்திக்கை கொலை செய்து சடலமாக வீசியதை ஒப்புகொண்டு வாக்குமூலமாக அளித்தனர்

அவர்கள் வசிக்கும்  பகுதியில்  கணவரை பிரிந்த பெண் சுபா(42) என்பவர் "புது சுவை டீ ஸ்டால்"  என்ற பெயரில் இட்லிக் கடை நடத்தி வந்ததாகவும், அப்பெண்ணுடன் கார்த்திக் நெருக்கமாக பழகியதாகவும் அதுவே கொலைக்கு காரணம் என்றும் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.