சாப்பிட்டு கொண்டிருந்த நபரை வெட்டி கொன்ற கும்பல்

 
murder

திண்டுக்கல்லில் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த  ரவுடி பழிக்கு பலியாக அடையாளம் தெரியாத மூன்று நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் இருந்து மொட்டணம்பட்டி செல்லும் சாலையில் உள்ளது  எம்.ஜி.ஆர் நகர் இப்பகுதியை சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி மஞ்சுளா இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இவர் சுள்ளான் என்பவரை வெட்டி படுகொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்பொழுது ஜாமினில் வெளியே வந்துள்ளார். மேலும் திண்டுக்கல்லில் இருந்தால் எதிரிகளால் தனது உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் தற்பொழுது திருப்பூரில் வசித்து வருகிறார். 

இந்நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளை திருப்பூர் அழைத்துச் செல்வதற்காக தனது வீட்டிற்கு வந்துள்ளார். இன்று 07.07.24 இரவு தனது வீட்டில் தாய், மனைவி, அக்காவுடன் அமர்ந்து உணவு அருந்தி கொண்டிருந்தார்.  அப்பொழுது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் திடீரென்று வீட்டுக்குள் புகுந்து தாய், மனைவி, குழந்தைகள் கண் முன்னே வினோத்தை வெட்டி படுகொலை செய்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீசார் வினோத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பழிக்கு பலியாக கொலை நடைபெற்றுள்ளதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.