கடலூர் அருகே கொடூரமாக கொலை செய்யப்பட்ட ரவுடி

 
murder

புதுச்சேரியைச் சேர்ந்த ரவுடி கடலூர் அருகே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

murder

புதுவை மாநிலம் கிருமாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி(28). இவர் மீது புதுவை மற்றும் தமிழக பகுதிகளில் நான்கு கொலை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. ரவுடியான இவர் கட்டப்பஞ்சாயத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் காரணமாக இவர் மீது புதுவை மாநில ரவுடி கோஷிடிகளுக்கு இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் தாடி நத்தம் பகுதியில் வயல்வெளியில் உடல் சிதைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தூக்கணம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட போது உடலில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டப்பட்டு உடல் சிதைக்கப்பட்டு முகம் மட்டும் அடையாளம் காணும் அளவிற்கு அவரது உடல் சிதைக்கப்பட்டிருந்தது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். 

இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையில் புகழேந்தியை அழைத்து வந்த ரவுடி கும்பல் அங்கு அவரை கொடூரமாக கொலை செய்து தப்பியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரவுடி புகழேந்தி கொல்லப்பட்டதற்கு ரவுடிகளுக்கிடையான முன் விரோதம் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரி ரவுடி கடலூர் அருகே அழைத்து வந்து கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.