10 ஆண்டுகளாக கொடுமையை அனுபவிக்கும் பெண்! மதபோதகர் செய்த கொடூர செயல்

 
Abuse

சென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணுக்கு கடந்த பத்து வருடங்களாக பாலியல் தொந்தரவு கொடுத்த வந்த  மத போதகராக இருந்து செக்யூரிட்டி ஏஜென்சி நடத்தி வருபவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

secxual Abuse


ரகுநாதன் என்பவர் கடந்த 2015-ஆம் ஆண்டு ராயபுரத்தில் மத போதகர் என்று கூறி வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்பொழுது வீட்டின் உரிமையாளரின் மகளான  20 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அறிந்த பெண்ணின் தந்தை மத போதகர் ரகுநாதனை வீட்டை காலி செய்து அனுப்பி உள்ளார். இதனை அடுத்து அந்த பெண் கல்லூரி செல்லும் போதும், வேலைக்கு செல்லும் பொழுதெல்லாம் ரகுநாதன் பின் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

அப்பெண்ணுக்கு 2021 ஆம் ஆண்டு திருமணமாகி கணவருடன் வாழ்ந்து வந்த நிலையில், குழந்தை பேருக்காக தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தபோது ரகுநாதன் மீண்டும் செல்போனில் பேசி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து பெண்ணின் கணவரிடம் இரண்டு பேருக்கும் உறவு உள்ளதாக தவறுதலாக கூறியதால்,  கணவர் தன்னை பிரிந்து சென்று விட்டதாகவும் தற்பொழுது கணவர் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார் என்றும் பாதிக்கப்பட்ட கூறியுள்ளார். கணவரிடம் தவறுதலாக கூறி குடும்பப் பிரச்சினையை உண்டாக்கி விவாகரத்து வரை கொண்டு சென்ற ரகுநாதன் மீது நடவடிக்கை எடுக்கும்படி இராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  புகாரின் பேரில்  இராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசார் விசாரணை ஈடுபட்டனர் 

abuse


2015 ஆம் ஆண்டு மத போதகராக இருந்த ரகுநாதன் பின்னர் தேனாம்பேட்டை பகுதியில் தனியார் செக்யூரிட்டி ஏஜென்சி நடத்தி வருவது தெரிய வந்தது. இதனை அடுத்து ரகுநாதன் மீது வழக்கு பதிவு செய்து தேனாம்பேட்டை நக்கீரன் நகர் பகுதியைச் சேர்ந்த ரகுநாதன் என்பவரை போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.