அண்ணியுடன் உறவு!பஞ்சாயத்தார் வைத்த அக்னி பரீட்சை

 
zx

 அண்ணியுடன் அந்த வாலிபருக்கு கள்ள உறவு இருக்கிறது என்பது ஊர் முழுவதும் பரவி இருக்கிறது.  ஆனால் தான் அப்படி இல்லை என்று அந்த வாலிபர் மறுத்து வந்திருக்கிறார்.  அது உண்மை என்றால் அக்னி பரிட்சையில் பங்கேற்க வேண்டும் என்று கிராமத்து பஞ்சாயத்தார் தீர்ப்பளிக்க , அக்கினி பரிட்சையில் பங்கேற்று தான் அண்ணி உடன் தொடர்பில் இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார்.   ஆனாலும் அதன் பின்னரும் அவரை அண்ணியுடன் உறவில் இருப்பதாக சொல்லச் சொல்லி கட்டாயப்படுத்தி வருகிறார்கள். இது குறித்து போலீசுக்கு புகார் சென்று இருக்கிறது.

 தெலுங்கானா மாநிலத்தில் பஞ்ச ரூப் பள்ளி கிராமம்.   இக்கிராமத்தைச் சேர்ந்த அண்ணன் தனது மனைவியுடன் தம்பி கள்ள உறவில் இருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.   ஆனால்  தம்பியும் மனைவியும் தங்களிடம் கள்ள உறவு இல்லை என்று எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவர் கேட்கவே இல்லை.  பஞ்சாயத்தில் சென்று புகார் அளித்திருக்கிறார். 

g

 பஞ்சாயத்தார் அனைவரையும் கூட்டி விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.  அதில் தங்களுக்குள் கள்ள உறவு இல்லை என்று அந்த வாலிபரும் பெண்ணும் சொல்லியும் யாரும் கேட்கவில்லை. அப்படி என்றால் அக்னி பரிட்சை வைக்கிறோம்.  அதில் தேர்வு பெற வேண்டியது உங்கள் வேலை என்று,   பஞ்சாயத்தார் அக்னி பரீட்சைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.  

இரும்பு கம்பி ஒன்றை போட்டு தீ வைத்து கொளுத்தி இருக்கிறார்கள்.   அந்த இரும்பு கம்பி சூடாகி கிடந்திருக்கிறது.   அந்த கம்பியை கையால் எடுத்து  அகற்ற வேண்டும். அப்படி செய்யும்போது கையில் சூடு பட்டு காயம் ஏற்படக்கூடாது காயம் ஏற்படாகாமல் இருந்தால் சொல்லப்படுவதில் உண்மை இல்லை. காயம் ஏற்பட்டால் சொல்லுவதில் பொய் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள்.

 அதன்படி அக்னி பரீட்சை நடந்திருக்கிறது . அந்த வாலிபரும்  அக்கினியில் பழுத்து கிடந்த இரும்பு கம்பியை கையால் எடுத்து அப்புறப்படுத்தியிருக்கிறார்.  அப்போது அவர் கையில் ஏதும் காயம் ஏற்படவில்லை.   இதனால் தனக்கும்  அண்ணிக்கும் கள்ள உறவு இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார்.  ஆனால் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி அன்று அக்னி பரீட்சை நடந்திருக்கிறது.  இந்த சம்பவத்திற்கு பின்னரும் அந்த வாலிபரை அழைத்து அண்ணிக்கும் உனக்கும் கள்ள உறவு இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி வந்திருக்கிறார்கள் பஞ்சாயத்தார்.

 இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் போலீசில் சென்று புகார் அளித்துள்ளார்.  கணவர் மற்றும் பஞ்சாயத்தார் மீது புகார் அளித்திருக்கிறார்.  அக்கினி பரிட்சையில் கொழுந்தன் தன்னை நிரூபித்த பின்னரும் வற்புறுத்துகிறார்கள் .  இதற்காக பஞ்சாயத்தார் 11 லட்சம் ரூபாய் பணம் பறித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார்.   இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பெண்ணின் கணவர் மற்றும் பஞ்சாயத்தாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.