வெளிநாட்டுப் பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து பாலியல் பலாத்காரம்

 
j

 வெளிநாட்டுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து அதை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த தனியார் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

 மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை அந்தேரி பகுதியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது அந்த தனியார் நிறுவனம்.  அந்த நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி மனிஷ்காந்தி .  34 வயதான இந்த வாலிபர் மீது அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் போலந்து நாட்டைச் சேர்ந்த அம்போலி என்பவர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்திருக்கிறார். 

vi

 34 வயதான அந்தப் பெண் அளித்த புகாரில் கடந்த 2017 ஆம் ஆண்டில் வெளிநாட்டு பெண்,  மனுஷ்காந்தியுடன் தொழில் சம்பந்தமாக ஜெர்மனி சென்று இருக்கிறார் அப்போது  ஜெர்மனியில் ஹோட்டல் அறையில் மனுஷ்காந்தி வெளிநாட்டுப் பெண் அம்போலியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.  பின்னர் பல இடங்களில் அந்த வெளிநாட்டு பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொண்டுமை செய்திருக்கிறார்.  

 பாலியல் பலாத்காரத்தின் போது அதை போட்டோ -வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு பின்னர் அதை காட்டி காட்டி , ஆபாச மாக எடுத்த படத்தை பரப்பி விடுவேன் என்று சொல்லி மிரட்டி இருக்கிறார்.  இதில் அச்சமடைந்த அந்த பெண் இதைப் பற்றி வெளியே யாரிடமும் சொல்லாமல் இருந்திருக்கிறார்.  இந்த நிலையில் மனிஷ்காந்தியின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்கவே வேறு வழியின்றி  போலீசில் புகார் அளிக்க,  மனிஷ்காந்தி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.