9வயது சிறுமி பாலியல் வன்கொடுமை- வாலிபருக்கு 9 ஆண்டுகள் சிறை

 
g

ஒன்பது வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி.  போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு ஒரு ஆண்டுக்குள் தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி.

 திண்டுக்கல் மாவட்டத்தில் பழனியில் காமராஜர் நகர்.   இப்பகுதியைச் சேர்ந்தவர் அய்யர்.   48 வயதான இந்த வாலிபர் தன் வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து இருக்கிறார்.   அந்த சிறுமி இதை பெற்றோரிடம் சென்று அழுதபடியே சொல்லி இருக்கிறார். மகளுக்கு நேர்ந்த அந்த சம்பவத்தைக் கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

m

 இதை அடுத்து போலீசார் அய்யர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர் . கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.   கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார் .

இது குறித்த வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்துள்ளது.  இந்த வழக்கில் விசாரணைகள் முடிவடைந்து சாட்சிகளின் வாக்குமூலங்கள் பெறப்பட்டு அய்யர் மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  இதை அடுத்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.   பழனி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா விசாரணை நடத்தி குற்றத்தை நிரூபித்திருக்கிறார். 

 இதை பின்னர் திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தின் நீதிபதி சரண் தீர்ப்பளித்துள்ளார்.   குற்றவாளி அய்யருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனையும் 20000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்து உள்ளார். 

 போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு ஒரு ஆண்டுக்குள் தீர்ப்பு வழங்கியிருப்பது திண்டுக்கல் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.