4 வயது சிறுமி பலாத்காரம் - வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை

 
c


வீடு புகுந்து நான்கு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் வாலிபருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை  விதித்து தீர்ப்பளித்து இருக்கிறது மங்களூர் நீதிமன்றம்.

 மங்களூருவில் கங்கனாடி பகுதியைச் சேர்ந்தவர் வினோத்.   46 வயதான இந்த வாலிபர் ஒரு கூலித் தொழிலாளி.   வினோத் தனது வீட்டின் அருகே பெற்றோருடன் வசித்து வந்து நான்கு வயது சிறுமியை நோட்டமிட்டு வந்திருக்கிறார் .  சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்று இருந்த நேரம் பார்த்து சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு திடீரென்று வீட்டுக்குள் புகுந்த அந்த நான்கு வயது சிறுமியை பலாத்காரம் செய்திருக்கிறார்.   இதில் சிறுமி கதறி அழுதிருக்கிறார்.

r

 கதறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து வினோத்தை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.  கங்கனாடி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வினோத்தை சிறையில் அடைத்துள்ளனர்.   கடந்த 2017 ஆம் ஆண்டில் மே மாதம் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.  இந்த வழக்கு மங்களூர் நீதிமன்றத்தில் நடந்து வந்துள்ளது  

 வழக்கின் விசாரணைகள் முழுவதும் முடிவடைந்து குற்றவாளி மீதான குற்றச்சாட்டு உறுதியானது.   இதை அடுத்து வினோத்துக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் 50,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி.  

 இந்த ஐம்பதாயிரம் ரூபாய் அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் மூன்று மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி.