ஆபாச வீடியோவை பார்க்க விடாமல் செய்ததால் ஆத்திரம்! மனைவி தீ வைத்து எரித்துக்கொலை

 
vv

செல்போனில் ஆபாச வீடியோ பார்த்துக் கொண்டிருந்த கணவரிடம் இனிமேல் இந்த படங்களை பார்க்க கூடாது என்று தடை விதித்த சத்தம் போட்டு செல்போனை பிடுங்கி இருக்கிறார்.   இதில் ஆத்திரம் அடைந்த கணவர்,   மனைவி உடலுக்கு தீ வைத்து இருக்கிறார்.   இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சிகிச்சை பலனின்றி  உயிரிழந்திருக்கிறா.

 குஜராத் மாநிலத்தில் பதான் மாவட்டம்.  அம்மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் கிஷோர்.  33 வயதான இந்த இளைஞர் இளைஞரின் மனைவி காஜல்.   கணவன்- மனைவி இருவரும் மும்பையில் உள்ள வைர நிறுவனத்தில் ஒன்றாக பணிபுரிந்து வந்துள்ளார்கள்.

f

 காஜல் ஏற்கனவே திருமணம் ஆகி 5 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்தவர்.  இதை தெரிந்து காஜலை காதலித்து இரு வீட்டு சம்மதத்துடன் கடந்த ஆண்டு திருமணம் செய்திருக்கிறார் கிஷோர்.   திருமணத்திற்கு பின்னர் சூரத் புறநகர்ப்பகுதியான கட்டர் கிராம் பகுதியில் வசித்து வந்துள்ளனர் தம்பதியினர்.

 கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டிலிருந்தபோது செல்போனில் ஆபாச வீடியோக்களை பார்த்திருக்கிறார் கிஷோர்.   இதை பார்த்துவிட்ட காஜல் கணவரை கண்டித்து இருக்கிறார்.   ஆபாச படங்கள் இனிமேல் பார்க்க கூடாது என்று செல்போனை பிடுங்கி இருக்கிறார்.   இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.   பின்னர் இருவரும் தூங்கிவிட்டனர் .  ஆனால் மறுநாள் திங்கட்கிழமை காலையில் இது தொடர்பாக வாக்குவாதம் தொடர்ந்து இருக்கிறது.   அப்போது ஆத்திரமடைந்த கிஷோர் தன் மனைவியை தீ வைத்து கொளுத்தி இருக்கிறார்.

தீவிபத்தில் 40 சதவிகித காயங்களுடன் அவதிப்பட்டு கொண்டிருந்த காஜலை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.   அங்கு காஜலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.   ஆனாலும்  அவருக்கு  நுரையீரல் பாதிப்புகள் இருந்ததால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை என்று கூறியிருக்கிறார்கள் மருத்துவர்கள்.

 இறப்பதற்கு முன் அந்தப் பெண் போலீசில் கடைசியாக அளித்த வாக்குமூலத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு கணவர் ஆபாச வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த வீடியோவை பார்க்க வேண்டாம் என்று நிறுத்தியதும்,  எங்களுக்குள் சண்டை ஏற்பட்டது.  இதனால்தான் எனக்கு அவர் தீ வைத்தார் என்று கூறி இருக்கிறார். ஆனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை நடந்து வந்தது போலீசார்  விசாரணை மூலம் தெரிய வந்திருக்கிறது.  நடந்தது என்ன என்பது குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.