மாற்றுத்திறனாளி பெண்ணை காரில் கடத்தி முந்திரி காட்டில் வைத்து பலாத்காரம்

 
ட்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வாய் பேச முடியாத காது கேளாத மாற்று திறனாளி பெண்மணியை காரில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து சாலையிலேயே விட்டுச்சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்பட்டது.


புதுக்கோட்டை மாவட்டம்  கறம்பக்குடி அருகே உள்ள  சாந்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வாய் பேச முடியாத காது கேளாத 35 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண்மணி அவரது தாயாரோடு வசித்து வரக்கூடிய நிலையில் அந்த பெண்மணி ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக்கோட்டை பகுதியில் செயல்படும் தனியார் அரிசி  ஆலை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.  இந்நிலையில் தான் நேற்று ஞாயிற்றுக்கிழமை சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்மணி பணி முடிந்து பேருந்துக்காக நின்றதாக கூறப்படுகிறது. அப்போது அப்பெண்மணிக்கு தெரிந்த  நபராக கூறப்படும் மணக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த  சேகர் (56) என்பவர் அவருடன் மாரிமுத்து (55) என்பவரோடு சென்று அந்த பெண்ணை வீட்டில் விடுவதாக காரில் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது சம்பந்தப்பட்ட இருவரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் சம்பந்தப்பட்ட பெண்மணியின் வீடு இருக்கும் சாலையில் செல்லாமல் மாற்று சாலையில் வாகனம் சென்றதால் வாய் பேச முடியாத  காது கேளாத மாற்றத்தினாளி பெண்மணி செய்கை முறையில் மாற்றுப்பாதையில் ஏன் செல்கிறீர்கள் என்று சேகரிடம் கேட்டுள்ளார். அப்போது அமைதியாக வா என்று கூறிய நிலையில் அந்தப் பெண்மணி முரண்டு பிடித்ததால் சேகரும் மாரிமுத்துவும் சேர்ந்து அந்த பெண்மணியை காரிலேயே தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண்மணியை மணக்கொள்ளை பகுதியில் உள்ள முந்திரி காட்டில் வைத்து
பாலியல்  தொல்லை கொடுத்து அங்கேயே நேற்று இரவு 8.30 மணிக்கு விட்டு சென்றுள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்தப் பெண்மணி அங்கிருந்து மெல்ல மெல்ல நடந்து சாலைக்கு வந்த போது கிராம மக்கள் அந்த பெண்மணியை  மீட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக கறம்பக்குடியில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவர் வந்துள்ளார்.  அப்போது சம்பந்தப்பட்ட பெண்மணியின் உடலில்  காயம் இருந்ததால் அந்த பெண்மணியிடம் விசாரித்த போது  செய்கை மொழியில் தனக்கு நடந்துவற்றை எடுத்துரைத்துள்ளார். பின்னர் அந்த பெண் காவலர் 108 ஆம்புலன்சில் அந்த பெண்மணியை மீட்ட நிலையில் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அந்த பெண்மணியை அழைத்துச் சென்றுள்ளனர்.


இதற்கிடையில் சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்மணி வழக்கமாக பணி முடிந்து வரும் நேரத்திற்கு வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த அவரது தாயார் மற்றும் உறவினர்கள் அந்த பெண்மணியை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இதற்குப் பிறகுதான் சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளியின் பெண்மணியின் நிலை  அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரிந்துள்ளது. பின்னர் அவர்கள் ஆலங்குடி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். பின்னர் மாற்றுத்திறனாளி பெண்மணி துணை காவல் கண்காணிப்பாளர் பாதுகாப்போடு புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு பெண்மணிக்கு எடுக்க வேண்டிய பரிசோதனைகள் எடுக்கப்பட்டு நான் அந்த பெண்மணியை மருத்துவர்கள் விட்டிற்கு அனுப்பியுள்ளனர். பின்னர் அந்த பெண்மணிக்கு காலையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு முதலில் கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கும் பின்னர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தற்போது புதுக்கோட்டை இராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து மழையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு  மணக்கொள்ளை கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து (55) என்பவரை  காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வரக்கூடிய நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த சேகர் (56)  என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.மேலும் இந்த வழக்கு பெண் பாலியல் வழக்கு என்பதால்  ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது.